சகிலா ஜலாலுதீன்

சகிலா ஜலாலுதீன் (Shakila Jalaluddin) என்பவர் சகிலா ஜலால் என அறியப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தின் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் சமூக நலத் துணை அமைச்சரும் ஆவார். இவர் 1962-ஆம் ஆண்டில் இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கச் சட்டசபையில் உறுப்பினரான போது இவருக்கு 24 வயது. இவர் சுயேச்சை வேட்பாளர் போனிபுசன் மொண்டலை தோற்கடித்தார். இன்று வரை, மேற்கு வங்காளத்தின் பசந்தி சட்டமன்றத் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற சாதனையை ஜலாலுதீன் வைத்திருக்கிறார்.[1][2][3]
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை
[தொகு]ஜலாலுதீன் அரசியல்வாதியும் மேற்கு வங்கத்தின் விவசாயத் துணை அமைச்சருமான அப்துசு சோகூரின் மகள் ஆவார்.[4] 1960-ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக இவரது தந்தை திடீரென இறந்த பிறகு, இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர் சகிலாவை அணுகித் தேர்தலில் போட்டியிட வேண்டினர். சகிலா தனது முதல் தேர்தலில் 42,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அரசியல் சாதனைகள்
[தொகு]ஜலாலுதீன் 1968-இல் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 1962 மற்றும் 1967 என இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜலாலுதீன் 1934 சூலை 5 அன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் 24 தெற்கு பர்கானாசில் உள்ள மாலிக்புரில் பிறந்தார். இவரது குடும்ப இல்லமான பெர்கத் மஞ்சி, கொல்கத்தா நகரிலிருந்து 12 மைல் தொலைவில் உள்ளது. 1959ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அமைந்துள்ள பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் சர்வதேச விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1961-ஆம் ஆண்டில், சமூக நலத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, கொல்கத்தாவில் உள்ள ஜல் ஜலாலை மணந்தார். 1969ஆம் ஆண்டில், சகிலாவும் அவரது கணவரும் கனடா குடிபெயர்ந்தனர். இங்கு வந்த பிறகு தி ஒட்டாவா இதழ் மற்றும் தி ஃப்ரீ பிரஸ் வீக்லி ஆகியவற்றில் தோன்றினார். .
மரணம்
[தொகு]சகிலா ஜலாலுதீன் தனது வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், 30 மே 2015 அன்று ஒட்டாவாவில் இறந்தார். இவரது கணவர் ஜல் ஜலால், இவரது இரண்டு குழந்தைகள் ஆடம் மற்றும் தானியா, பேரக்குழந்தைகள், சப்ரினா மற்றும் ஸ்டீபனி ஆகியோர் கனடாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bagchi, Jasodhara; Gupta, Sarmistha Dutta (24 January 2005). The Changing Status of Women in West Bengal, 1970-2000), Edited by Jasodhara Bagchi, ISBN 0761932429. ISBN 0761932429.
- ↑ "KEY HIGHLIGHTS OF GENERAL ELECTION 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL" (PDF).
- ↑ "Empowering India". Archived from the original on 4 February 2016.
- ↑ Coale, Ansley Johnson; Hoover, Edgar M. (2015). Population Growth and Economic Development. Princeton University Press. ISBN 9781400878598. Retrieved 11 November 2019.
- ↑ "Basanti Assembly Constituency Map".