சகா அதீத்
சகா அதீத் | |
---|---|
![]() 2013 இல் சகா அதீத் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | |
பிறப்பு | சகா முகமது அதீத் 31 அக்டோபர் 1950 பகுதாது, ஈராக் இராச்சியம் |
இறப்பு | 31 மார்ச்சு 2016 மயாமி, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 65)
பாடசாலை | பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகம் கட்டிடக்கலை சங்க கட்டிடக்கலை பள்ளி |
பணி | |
கட்டிடங்கள் | விட்ரா தீயணைப்பு நிலையம், மாக்சி அருங்காட்சியம், பெவிலியன் பாலம், சமகால கலை மையம், ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம், ஆற்றோர அருங்காட்சியகம் |
சகா முகமது அதீத் (Dame Zaha Mohamed Hadid) (31 அக்டோபர் 1950-31 மார்ச் 2016) ஓர் ஈராக்கிய மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கட்டிடக் கலைஞரும், ஓவியரும் மற்றும் வடிவமைப்பாளரும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டிடக்கலையில் ஒரு முக்கிய நபராக அங்கீகரிக்கப்பட்டார்.
சுயசரிதை
[தொகு]ஈராக்கின் தலைநகரம் பாக்தாத்தில் பிறந்த சகா அதீத், கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்., பின்னர் 1972 இல் கட்டிடக்கலை பள்ளியில் சேர்ந்தார்.[1] பாரம்பரிய கட்டிடக்கலை வரைபடத்திற்கு ஒரு மாற்று முறையைத் தேடி, தூய கலை உணர்வின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுருக்கக் கலை மற்றும் உருசிய அவாண்ட்-கார்டின் கலைப்படைப்புகளின் தாக்கத்தால், அதீத் ஓவியத்தை ஒரு வடிவமைப்பு கருவியாகவும், கொள்கையாகவும் ஏற்றுக்கொண்டார்.[2]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]அதீத் 2004 ஆம் ஆண்டில் கட்டிடக்கலையில் மிகவும் மதிப்புமிக்க விருதான பிறிட்ஸ்கர் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[3] 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிகவும் மதிப்புமிக்க கட்டிடக்கலை விருதான இசுடிர்லிங் பரிசைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில், கட்டிடக்கலைக்கான சேவைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் மதிப்புமிக்க கலைஞரானார். மேலும் பிப்ரவரி 2016 இல், தான் இறப்பதற்கு முந்தைய மாதத்தில், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கத்திடமிருந்து “தங்கப் பதக்கம்” பெற்ற முதல் பெண்மணி ஆனார்.[4]
படைப்புகள்
[தொகு]கட்டிடக்கலை வடிவவியலை விடுவித்து, அதற்கு ஒரு புதிய வெளிப்பாட்டு அடையாளத்தை வழங்கியவர்[5] என்பதால் தி கார்டியன் இவரை “வடிவியல்களின் ராணி” என்று விவரித்தது.[6] இவரது முக்கிய படைப்புகளில் 2012 ஒலிம்பிக்கிற்கான இலண்டன் நீச்சல் மையம், பிராட் கலை அருங்காட்சியகம், உரோமின் மேக்ஸி அருங்காட்சியகம் மற்றும் குவாங்சோ ஓபரா இல்லம் ஆகியவை அடங்கும்.[7] 2017 பிரிட் விருதுகளுக்கான சிலை உட்பட இவரது சில விருதுகள் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளன. இவரது பெயருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டுகளுடன், 2013 போர்ப்ஸின் "உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களில்" ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[8][9][10] பெய்சிங்கிலுள்ள பெய்ஜிங் டாக்ஜின் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 2022 உலகக்கோப்பை காற்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற கத்தார் நாட்டிலுள்ளஅல் சானுப் விளையாட்டரங்கம் உட்பட இவரது பல கட்டிடங்கள் இவரது இறப்பின் போது கட்டுமானத்தில் இருந்தன.[11][12][13]
இறப்பு
[தொகு]
மூச்சுக்குழல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த[14][15] சகா அதித் 31 மார்ச் 2016 அன்று, மியாமியிலுள்ள மவுண்ட் சினாய் மருத்துவ மையத்தில் 65 வயதில் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zaha Hadid | Biography, Buildings, Architecture, Death, & Facts | Britannica". britannica.com (in ஆங்கிலம்). Retrieved 7 November 2022.
- ↑ Serrazanetti, Francesca; Schubert, Matteo, eds. (2011). Zaha Hadid: Inspiration and Process in Architecture. China: Moleskine. p. 56. ISBN 9788866130048.
Technology's rapid development and our ever-changing lifestyles created a fundamentally new and exhilarating backdrop for building, and in this new world context I felt we must reinvestigate the aborted and untested experiments of Modernism – not to resurrect them, but to unveil new fields of building.
- ↑ Nonie Niesewand (March 2015). "Through the Glass Ceiling". Architectural Digest. Retrieved 22 December 2018.
- ↑ "Zaha Hadid receives Royal Gold Medal". architecture.com.
- ↑ Kimmelman, Michael (31 March 2016). "Zaha Hadid, Groundbreaking Architect, Dies at 65". The New York Times. https://www.nytimes.com/2016/04/01/arts/design/zaha-hadid-architect-dies.html.
- ↑ "Queen of the curve' Zaha Hadid died at aged 65 from heart attack". The Guardian. 29 November 2016. https://www.theguardian.com/artanddesign/2016/mar/31/star-architect-zaha-hadid-dies-aged-65.
- ↑ Kamin, Blair (1 April 2016). "Visionary architect 1st woman to win Pritzker". Chicago Tribune: p. 7.
- ↑ "Zaha Hadid, architect of MSU's Broad Art Museum, dies". 31 March 2016.
- ↑ https://www.zaha-hadid.com/awards/forbes-100-most-powerful-women/%7Cdate=August 2024}}
- ↑ "Zaha Hadid: A Woman's Perspective on Architecture". 15 June 2020.
- ↑ "Dame Zaha Hadid's Brit Awards statuette design unveiled". 1 December 2016. https://www.bbc.co.uk/news/entertainment-arts-38160633.
- ↑ "New York Review of Books critic 'regrets error' in Zaha Hadid article". https://www.theguardian.com/artanddesign/2014/aug/26/zaha-hadid-magazine-critic-issues-retraction.
- ↑ "Big New Airport Shows China's Strengths (and Weaknesses)". 24 November 2018. https://www.nytimes.com/2018/11/24/world/asia/china-beijing-daxing-airport.html.
- ↑ "Architect Dame Zaha Hadid dies after heart attack". BBC News. 31 March 2016. https://www.bbc.com/news/entertainment-arts-35936768.
- ↑ Editorial Desk (1 April 2016). "'Formidable' Zaha Hadid dies, aged 65". ArchitectureAU. Retrieved 22 December 2018.
நூல் ஆதாரங்கள்
[தொகு]- Taschen, Aurelia, ed. (2016). L'Architecture Moderne de A à Z (in பிரெஞ்சு). Taschen, Balthazar. Bibliotheca Universalis. ISBN 978-3-8365-5630-9.
- Fontana-Giusti, Gordana and Schumacher, Patrik. (2004). Complete Works of Zaha Hadid, 4 volumes, Thames and Hudson, Rizzoli, published in English, translated into German and Spanish. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-34200-8
- Jodidio, Philip (2016). Zaha Hadid (in பிரெஞ்சு). Taschen. ISBN 978-3-8365-3626-4.