சகாரிகா காட்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாரிகா காட்கே
சகாரிகா காட்கே
2018இல் நடந்த இலக்மே அழகுப் போட்டியில் சகாரிகா காட்கே
பிறப்புசகாரிகா காட்கே
8 சனவரி 1986 (1986-01-08) (அகவை 38)
கோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிவடிவழகி, திரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை
அறியப்படுவதுசக் தே இந்தியா
வாழ்க்கைத்
துணை

சாகரிகா காட்கே (Sagarika Ghatge) ஒரு இந்திய வடிவழகியும், தேசிய அளவிலான தடகள வீரரும், நடிகையும் ஆவார். சக் தே இந்தியா என்ற பாலிவுட் திரைப்படத்தில் பிரீதி சபர்வால் என்ற பாத்திரத்தில் நடித்ததில் நன்கு அறியபடுகிறார். 2015ஆம் ஆண்டில், இவர் பியர் பேக்டர்: கத்ரான் கே கிலாடி என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளரானார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மகாராட்டிராவின் கோலாப்பூரில் விஜய்சின் காட்கே ( விஜயேந்திர காட்கே என சில சமயங்களில் அறிவிக்கப்பட்டது) என்பவருக்கும் உர்மிளா காட்கே ஆகியோருக்கு இவர் பிறந்தார். கோலாப்பூரில் இவர் எட்டு வயது வரை தங்கியிருந்தார். பின்னர் மாயோ கல்லூரி பெண்கள் பள்ளியில் சேர ராஜஸ்தானின்அஜ்மீருக்கு அஜ்மீருக்கு மாற்றப்பட்டார். [2] இவர் கோலாப்பூரின் சாகு மகாராஜ் மூலம் இந்தியாவின் முன்னாள் அரச இல்லத்துடன் தொடர்புடையவர். [3]

சொந்த வாழ்க்கை[தொகு]

24 ஏப்ரல் 2017 அன்று, இவர் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். [4] இருவரும் நவம்பர் 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். [5]

தொழில்[தொகு]

2007ஆம் ஆண்டில், இவர் சக் தே இந்தியா என்ற இந்திப் படத்தில் ப்ரீத்தி சபர்வாலை சித்தரித்தார், இதன் காரணமாக இவர் ரீபோக் இந்தியாவின் விளம்பரத் தூதரானார். [6] இவர் ஆடை வடிவமைப்புப் பத்திரிகைகளிலும், பல்வேறு அழகு நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

இவர், 2009 ஆம் ஆண்டில் பாக்ஸ் என்ற படத்தில் ஊர்வசி மாத்தூராக தோன்றினார். பின்னர் காமியா என்ற வேடத்தில் மைலி நா மைலே ஹம் படத்தில் நடித்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு ரஷ் படத்தில் இம்ரான் ஹாஷ்மிக்கு இணையாக நடித்தார். அடுத்ததாக சதீஷ் ராஜ்வாடேயின் மராத்தி திரைப்படமான பிரேமாச்சி கோஷ்டாவில் அதுல் குல்கர்னியுடன் நடித்தார். இது 2013இல் வெளியானது, இது இவரது முதல் மராத்தி திரைப்படமாகும்.

2015 ஆம் ஆண்டில், இவர் பியர் பேக்டர்: கத்ரான் கே கிலாடி என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளரானார். இவர் தனது பஞ்சாபித் திரைப்பட தில்தாரியன் என்ற அறிமுகப் படத்தில் ஜாஸ்ஸி கில் என்பவருடன் நடித்தார், அதில் இவர் பாலி என்ற பாத்திரத்தைச் சித்தரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "I miss playing hockey: Sagarika Ghatge". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 August 2007. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/I-miss-playing-hockeySagarika/articleshow/2288149.cms. பார்த்த நாள்: 9 February 2017. 
  2. "I'm determined & focused: Sagarika". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 August 2007.
  3. "Sagarika Ghatge: Lesser known facts about the actress". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 April 2017.
  4. "Zaheer Khan announces engagement with actress Sagarika Ghatge". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/ipl-2017-10/zaheer-khan-announces-engagement-with-actress-sagarika-ghatge-4626646/. பார்த்த நாள்: 24 April 2017. 
  5. "Sagarika Ghatge marries Zaheer Khan". The Indian Express. http://indianexpress.com/article/entertainment/bollywood/zaheer-khan-sagarika-ghatge-ties-the-knot-see-first-photos-all-wedding-updates-4950683/. பார்த்த நாள்: 23 November 2017. 
  6. "Sagarika Ghatge is Reebok's brand ambassador". பார்க்கப்பட்ட நாள் 23 February 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரிகா_காட்கே&oldid=3127866" இலிருந்து மீள்விக்கப்பட்டது