சகாப்பூர்
சகாப்பூர் Sahapur | |
|---|---|
கணக்கெடுப்பில் உள்ள நகரம் | |
| ஆள்கூறுகள்: 22°31′N 88°10′E / 22.52°N 88.17°E | |
| நாடு | |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | அவுரா |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 9,022 |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | WB |
| மக்களவை (இந்தியா) தொகுதி | அவுரா |
| மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | பஞ்ச்லா |
| இணையதளம் | howrah |
சகாப்பூர் (Sahapur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள அவுரா மாவட்டத்தில் உள்ள அவுரா சதார் துணைக்கோட்டத்தின் பஞ்ச்லா வட்டார வளர்ச்சித் தொகுதியில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும்.[1]
புவியியல்
[தொகு]22°31′N 88°10′E / 22.52°N 88.17°E.[2] என்ற புவியியல் ஆள்கூறுகளில் சகாப்பூர் நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் உள்ளது. சகாப்பூர் மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ள ஒண்டா காவல் நிலையம் மற்றும் சாந்தோர் பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[3] சகாப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 7533 ஆகும். இக்மக்கள் தொகையில் ஆண்கள் சதவீதம் 51% ஆகவும் பெண்கள் சதவீதம் 49%. ஆகவும் இருந்தது. சகாப்பூர் நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 66% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். சகாப்பூர் நகரத்தில் ஆண்களின் கல்வியறிவு சதவீதம் 70 சதவீதமாகவும் பெண்களின் கல்வியறிவு சதவீதம் 62 சதவீதம் ஆகவும் இருந்தது. மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் 6 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சகாப்பூர் மொத்த மக்கள் தொகை 9022 ஆகும். இதில் 4675 (52%) ஆண்களும் 4347 (48%) பெண்களும் இருந்தனர். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 3528 ஆகும். சகாப்பூரின் மொத்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 6247 ஆகும். 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 78.96% ஆக இருந்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District-wise list of stautory towns". Census Commission of India. Archived from the original on 2007-09-30. Retrieved 2009-01-28.
- ↑ Falling Rain Genomics, Inc - Sahapur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)". 2011 census: West Bengal – District-wise CD Blocks. Registrar General and Census Commissioner, India. Retrieved 11 May 2016.