சகலகலாவல்லி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டிய தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாதுஷாவாக விளங்கிய முகம்மதிய மன்னனை வாதிலே வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக சகலகலாவல்லி மாலை என்னும் பாமாலையைப் பாடினார்.

அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை வெண்டாமரைக்... எனும் பாடலில் தொடங்கி மண்கண்ட வெண்குடை.. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. ஈழத்தில் நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகலகலாவல்லி_மாலை&oldid=2853846" இருந்து மீள்விக்கப்பட்டது