சகதாயி கானரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சகதை கானேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சகதாயி கானரசு
Цагаадайн Хаант Улс
த்சகடைனா கானட் உளூஸ்
Status பேரரசு
தலைநகரம்அல்மலிக், கர்ஷி
சமயம்
அரசாங்கம் பகுதியளவு தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசு, பின்னர் வாரிசு வழி குடியரசு
சட்டமன்றம் குறுல்த்தாய்
நாணயம் நாணயங்கள் (திர்காம்கள், கெபெக் மற்றும் புல்)

சகதாயி கானரசு (மொங்கோலியம்: Цагаадайн Хаант Улс த்சகடைனா கானட் உளூஸ்) என்பது பிற்காலத்தில் துருக்கியமாக்கப்பட்ட ஒரு மொங்கோலிய கானரசாகும்.[1][2][3] இது செங்கிஸ்கானின் இரண்டாவது மகனான சகதாயி கான், அவரது வழித்தோன்றல்கள், பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் இது மொங்கோலியப் பேரரசின் பகுதியாக இருந்தது. ஆனால் மங்கோலியப் பேரரசின் பிரிவிற்கு பிறகு 1259 இல் இது தனி கானேடாக செயல்பட ஆரம்பித்தது. 1304 இல் சகதாயி கானரசு யுவான் அரசமரபின் பெயரளவு உயர்ந்த நிலையை ஏற்றுக் கொண்டது.[4] ஆனால் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டு பகுதிகளாக பிரிந்தது. அவை மேற்கு சகதை கானேடு மற்றும் மொகுலிஸ்தான் ஆகியவை ஆகும்.

13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் அதிகபட்ச பரப்பளவின்போது இந்தக் கானேடானது அரல் கடலின் தெற்குப் பகுதியில் அமு தர்யா முதல் நவீன கால மொங்கோலிய சீன எல்லையில் உள்ள அல்தாயி மலைகள் வரை பரவியிருந்தது.[5]

இக்கானரசு ஒரு வடிவம் அல்லது மற்றோர் வடிவத்தில் 1220கள் முதல் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. 1370 இல் இந்த கானேட்டின் மேற்குப்பகுதி தைமூரின் பேரரசிடம் வீழ்ந்த போதிலும் இவ்வாறு நீடித்தது. பேரரசின் கிழக்கு பகுதியானது சகதை கான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அவர்கள் சில நேரங்களில் தைமூரின் வழிவந்தவர்களான தைமூரிய அரசமரபோடு கூட்டணியிலும் சில நேரங்களில் போரிட்டுக் கொண்டும் இருந்தனர். கடைசியாக 17 ஆம் நூற்றாண்டில் எஞ்சிய பகுதிகள் அஃபக் கோஜாவின் தேவராஜ்ய ஆட்சி மற்றும் அவரது வழித்தோன்றல்கள், மற்றும் சுங்கர் கானேடு மற்றும் மஞ்சு ஆட்சியாளர்களின் கீழ் சிஞ்சியாங்கை ஆண்ட கோஜாக்கள் ஆகியோரின் கீழ் வரிசையாக வந்தது.

உசாத்துணை[தொகு]

  1. Black, Cyril E.; Louis Dupree (professor); Endicott-West, Elizabeth; Matuszewski, Daniel C.; Eden Naby; Arthur Waldron (1991). The Modernization of Inner Asia. Armonk, N.Y.: M.E. Sharpe. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-315-48899-8. https://books.google.com/books?id=TMoYDQAAQBAJ&pg=PT57. பார்த்த நாள்: 20 November 2016. 
  2. Upshur, Jiu-Hwa L.; Terry, Janice J.; Holoka, Jim; Cassar, George H.; Goff, Richard D. (2011). Cengage Advantage Books: World History (5th ). Cengage Learning. பக். 433. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-133-38707-7. https://books.google.com/books?id=6RgJAAAAQBAJ&pg=PA433. பார்த்த நாள்: 20 November 2016. 
  3. Alternative spellings of Chagatai include Chagata, Chugta, Chagta, Djagatai, Jagatai, Chaghtai etc.
  4. Dai Matsui – A Mongolian Decree from the Chaghataid Khanate Discovered at Dunhuang. Aspects of Research into Central Asian Buddhism, 2008, pp. 159–178
  5. See Barnes, Parekh and Hudson, p. 87; Barraclough, p. 127; Historical Maps on File, p. 2.27; and LACMA for differing versions of the boundaries of the khanate.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதாயி_கானரசு&oldid=2869615" இருந்து மீள்விக்கப்பட்டது