சஃபாலி வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஃபாலி வர்மா
Shafali Verma
2020 பன்னாட்டு 20/20 துடுப்பாட்டப் போட்டியில் உலகக்கோப்பையில், 6 ஓட்டங்கள் அடிக்கும் வர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஃபாலி வர்மா
பிறப்பு28 சனவரி 2004 (2004-01-28) (அகவை 20)
ரோத்தக், அரியானா, India[1]
மட்டையாட்ட நடைவலது கை ஆட்டம்
பங்குமட்டைப்பந்தாட்ட வீராங்கனை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019 முதல்ஐபிஎல் வெலாசிட்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் 20/20 துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 18
ஓட்டங்கள் 485
மட்டையாட்ட சராசரி 28.52
100கள்/50கள் 0/2
அதியுயர் ஓட்டம் 73
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/–
மூலம்: Cricinfo, 30 January 2021

சஃபாலி வர்மா (Shafali Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார்.[2][3][4] 2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்காக இவர் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[5]

தனிப்பட்ட வாழ்வும் பின்புலமும்[தொகு]

அரியானா மாநிலத்திலுள்ள ரோத்தக் நகரில் சஃபாலி வர்மா பிறந்தார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஃபாலிக்கு 9 வயதாக இருக்கும்போது சச்சின் டெண்டுல்கரின் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டதால் இவருக்கு துடுப்பாட்டத்தின் மீது ஆர்வம் உண்டானது. இவரது தந்தையும் சகோதரரும் இந்த ஆர்வத்தை மேலும் தூண்டி ஆதரவளித்துள்ளனர். ஓர் உள்ளூர் போட்டியில் உடல்நிலை சரியிலாமலிருந்த தனது சகோதரனுக்குப் பதிலாக அப்போட்டியில் விளையாட சஃபாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் இவருக்கு கிடைத்தன.

தொழில்முறை சாதனைகள்[தொகு]

 1. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய மகளிர் இருபது -20 அணியில் சஃபாலி இடம் பெற்றார்.[6] இப்போட்டியே இவருக்கு அறிமுகப் போட்டியாகும். 15 வயதில் [7] அறிமுகம் என்பதால் இந்திய அணியில் மிக இளம் வயது வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[8]
 2. 2019 ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய மகளிர் இருபது -20 அணியில் சஃபாலி இடம் பெற்றார். இப்போட்டியில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பு சஃபாலிக்கு சேர்ந்தது.[9][10] 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 158 ஓட்டங்கள் எடுத்து தொடர் நாயகி என்ற விருதும் கிடைத்தது.[11]
 3. 2020 ஆண்டு சனவரியில் ஆத்திரேலியாவுக்கு எதிரான பெண்கள் 20/20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இடம்பெற்றார். தற்பொழுது பெண்கள் 20/20 விளையாட்டு வீரர்களின் தரவரிசைப்  பட்டியலில் சஃபாலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Women's T20 World Cup: Rohtak to Sydney, the journey of Shafali Verma". SportStar. பார்க்கப்பட்ட நாள் 21 February 2020.
 2. "Shafali Verma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
 3. "Shafali Verma, the tomboy teen who could be India's next cricket superstar". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
 4. "Women's T20 World Cup: Shafali Verma, India's 16-year-old 'rock star'". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
 5. "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
 6. "Fifteen-year-old Shafali Verma gets maiden India call-up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
 7. "1st T20I (N), South Africa Women tour of India at Surat, Sep 24 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
 8. "Hadlee's nine-for". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
 9. "Shafali Verma, India's 15-year-old prodigy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
 10. "India's Shafali Verma, 15, becomes youngest player to score a fifty for country". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019.
 11. "Jemimah, Veda help IND blank WI 5-0 in T20Is". Women's CricZone. Archived from the original on 10 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 12. "Celebrating up and coming cricketers this International Youth Day". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃபாலி_வர்மா&oldid=3649866" இலிருந்து மீள்விக்கப்பட்டது