சஃது அபூபக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் முகம்மது மூன்றாம் சஃது அபூபக்கர்
2016 ஓகத்து 23 அன்று சுல்தான் சஃது அபூபக்கர்
சொகோட்டோ சுல்தான்
அமீருல் முஃமினீன்
முன்னவர் முகம்மது மசிடோ
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 24, 1956 (1956-08-24) (அகவை 67)
சொகோட்டோ, சொகோட்டோ மாநிலம், நைஜீரியா
பெற்றோர் சித்தீக் அபூபக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள் பரேவா கல்லூரி
நைஜீரியப் பாதுகாப்புக் கலாசாலை
கட்டளையும் ஆளணியும் கல்லூரி, ஜஜி
சமயம் சுன்னி இஸ்லாம் (காதிரிய்யா சூபி
படைத்துறைப் பணி
பற்றிணைவு  நைஜீரியா
கிளை நைஜீரிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1975 – 2006
தர வரிசை பிரிகேடியர் ஜெனரல்

அமீருல் முஃமினீன் ஷைக் அல்-சுல்தான் முகம்மது சஃது அபூபக்கர் (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1956 சொகோட்டோ நகரில்) சொகோட்டோவின் 20 ஆம் சுல்தான் ஆவார். வடக்கு நைஜீரியாவின் சொகோட்டோ நகரின் பெயரளவிலான ஆட்சியாளரான அவர் ஜமாஅத்து நஸ்ரில் இஸ்லாம் (இஸ்லாமிய வெற்றிக்கான சங்கம்) எனும் அமைப்பின் தலைவராவார். அத்துடன் அவரே இஸ்லாமிய விவகாரங்களுக்கான நைஜீரிய தேசிய மீஉயர் பேரவையின் பெருந் தலைவர் ஆவார்.[1]

சொகோட்டோவின் சுல்தான் என்ற அடிப்படையில் அவர் நைஜீரியாவின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியாக வாழும் 70 மில்லியன் முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவராக விளங்குகிறார்.[2]

சஃது அபூபக்கர் 2006 நவம்பர் 2 ஆம் திகதி விமான விபத்தில் இறந்துவிட்ட தன் சகோதரர் முகம்மது மசிடோவைத் தொடர்ந்து பதவிக்கு வந்தார். அவரது சகோதரரின் மகனும் பேரனும் மேற்படி விமான விபத்தில் இறந்து விட்டதனாலேயே சஃது அபூபக்கர் சுல்தானாகத் தகுதி பெற்றார்.[3]

வரலாறு[தொகு]

சஃது அபூபக்கர் சொகோட்டோ சுல்தானகத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அதன் பதினேழாவது சுல்தான் சித்தீக் அபூபக்கர் டான் உதுமானின் மகனாவார்.[4] 1975 இல் நைஜீரிய இராணுவத்தில் சேர்ந்த அபூபக்கர், இரண்டாண்டுகளின் பின்னர் இரண்டாம் நிலை லெப்டினன் தரத்திற்குப் பதவியுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் அவர் இராணுவக் கவசப் படைப் பிரிவில் பணியாற்றினார். இந்தியா, கனடா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் அவர் இராணுவப் பயிற்சி பெற்றார்.

1980களின் இறுதிப் பகுதியில் நைஜீரியாவின் இராணுவ ஆட்சியாளராக விளங்கிய ஜெனரல் இப்ராகீம் பாபாங்கிடாவுக்கான தனிப்பட்ட பாதுகாப்புக்குப் பொறுப்பான சனாதிபதி கவசப் படைப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்கினார். மேலும் அவர் 1980களின் முதற் பகுதியில் சாட் நாட்டில் பணியாற்றிய ஆபிரிக்க ஒற்றுமை அமையத்தின் அமைதிப் படையிற் பணியாற்றினார். 1990களில் அவர் மேற்கு ஆபிரிக்க பிராந்திய அமைதிப் படையின் இராணுவ இணைப்பதிகாரியாகவும் கடமை புரிந்தார்.[5] இவற்றுக்கு மேலதிகமாக அவர் சியேரா லியோனி நாட்டிலும் ஆபிரிக்க அமைதிப் படையில் பணியாற்றியுள்ளார்.[3] அவர் சொகோட்டோவின் 20 ஆம் சுல்தானாகப் பதவி வகிக்க அழைக்கப்பட்டபோது பாக்கிஸ்தான் நாட்டுக்கான நைஜீரிய இராணுவ ஆலோசகாரகவும் அவர் விளங்கினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Paden, John N. (2008). நைஜீரியாவில் மதமும் அரசியலும். வொசிங்டன், டிசி: அமைதிக்கான அமெரிக்க நிறுவன வெளியீட்டகம். பக். 32f. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781601270290. 
  2. Adedimeji, Adam; Ajakaye, Rafiu (2008-12-06). "Controversy as north celebrates Sallah on Arafah Day". Daily Independent (Lagos), via odili.net (Independent Newspapers Limited). http://odili.net/news/source/2008/dec/6/703.html. பார்த்த நாள்: 2009-02-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 Nigeria gets new Islamic leader
  4. சொகோட்டோ கலீபகமும் அதன் பாரம்பரியங்களும்
  5. நைஜீரிய இராணுவ வீரர் சொகோட்டோ சுல்தானாக
  6. "சஃது அபூபக்கர் - சொகோட்டோவின் புதிய சுல்தான்". 2007-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளித் தொடுப்புகள்[தொகு]

முன்னர்
முகம்மது மசிடோ
சொகோட்டோ சுல்தான்
2006 நவம்பர் 2–இப்போது வரை
பின்னர்
தற்போதிருப்பவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃது_அபூபக்கர்&oldid=3552526" இருந்து மீள்விக்கப்பட்டது