க. வெங்கடபதி
Appearance
க. வெங்கடபதி | |
---|---|
முன்னாள் மத்திய அமைச்சர் | |
தொகுதி | கடலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1946 சௌந்தரிவள்ளிபாளையம், சங்கராபுரம் வட்டம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | வசந்தா |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழிடம் | கள்ளக்குறிச்சி |
As of 22 September, 2006 மூலம்: [1] |
கண்ணுசாமி வெங்கடபதி (Kannusamy Venkatapathy பிறப்பு 15 சூன் 1946) ஆங்கில முன்னெழுத்து கொண்டு கே. வெங்கடபதி என அழைக்கப்படும் இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாவார். 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
2004 ஆம் ஆண்டு இவர் பதினான்காவது மக்களவை அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை அமைச்சராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Venkatapathy,Shri Kannusamy". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.