க. வி. தேவநாயகம்
கே. டபிள்யூ. தேவநாயகம் K. W. Devanayagam | |
---|---|
நிதி அமைச்சர் | |
பதவியில் 23 சூலை 1977 – பெப்ரவரி 1980 | |
பின்னவர் | நிசங்கா விஜேரத்தின |
உள்ளூராட்சி அமைச்சர் | |
பதவியில் பெப்ரவரி 1980 – 18 பெப்ரவரி 1989 | |
இலங்கை நாடாளுமன்றம் for கல்குடா | |
பதவியில் 1965–1989 | |
முன்னையவர் | பி. மாணிக்கவாசகம் |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செங்கலடி, மட்டக்களப்பு | 26 மார்ச்சு 1910
இறப்பு | 17 திசம்பர் 2002 கொழும்பு | (அகவை 92)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னாள் கல்லூரி | சென் யோசப் கல்லூரி, கொழும்பு இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (Kanapathipillai William Devanayagam, 26 மார்ச்சு 1910 – 17 டிசம்பர் 2002) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]தேவநாயகம் 1910 மார்ச் 26 இல்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே செங்கலடி என்ற கிராமத்தில் உடையார் குடும்பத்தில் கணபதிப்பிள்ளை வில்லியம், பியற்றிஸ் தங்கம் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கொழும்பு சென் யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3][4] விளையாட்டில் ஈடுபாடு கொண்ட தேவநாயகம், 1930 ஆம் ஆண்டில் பாடசாலைத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார். கிழக்கிலங்கை டென்னிசு சம்பியன் பட்டத்தை வென்றார்.[3][4] பள்ளிப் படிப்பை முடித்தது, இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து வழக்கறிஞரானார்.[3] பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[3][4]
அரசியலில்
[தொகு]1947 நாடாளுமன்றத் தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் வி. நல்லையாவிடம் 2,400 வாக்குகளால் தோற்றார்.[5] 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 6,566 வாக்குகள் பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 1970 1977 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.[7][8]
அமைச்சரவையில்
[தொகு]1977 சூலையில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] பின்னர் 1980 பெப்ரவரியில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][10] 1989 வரை அவர் இப்பதவில் இருந்தார். 1989 இறுதிப் பகுதியில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார்.[2]
சமூகப் பணி
[தொகு]தேவநாயகம் அனைத்திலங்கை கூட்டுறவு சங்கங்களின் பிரதித் தலைவராக இருந்தார். இவரின் பெயரில் மட்டக்களப்பு நகரில் 'தேவநாயகம் மண்டபம்' நிறுவப்பட்டது. இவரது அரசியல் செல்வாக்கினால் மட்டக்களப்பில் வந்தாறுமூலையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது.
கலாநிதிப் பட்டம்
[தொகு]தேவநாயகத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 ஏப்ரலில் (மறைவிற்குப் பின்னரான) கௌரவக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]
மறைவு
[தொகு]தேவநாயகம் 2002 டிசம்பர் 17 இல் கொழும்பில் காலமானார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devanayagam, Kanapathipillai William". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 அமரர் கே.டபிள்யு+. தேவநாயகத்துக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கலாநிதிப் பட்டம்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், 10 மே 2013
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Ex-Justice Minister Devanayagam dies". தி ஐலண்டு]]. 18 டிசம்பர் 2002 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304050351/http://www.island.lk/2002/12/18/news22.html.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Perera, Supun (23 சனவரி 2003). "K. W. Devanayagam - the gentle politician". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 13 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070513212247/http://www.dailynews.lk/2003/01/23/fea07.html.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ Rajasingham, K. T. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ Rajasingham, K. T. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
வெளி இணைப்புகள்
[தொகு]- JR’s Third Track Smashing the Basis, ரி. சபாரத்தினம்
- 1910 பிறப்புகள்
- 2002 இறப்புகள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
- இலங்கை உரோமன் கத்தோலிக்கர்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கையின் நீதி அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்