க. யோகசங்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணேசசங்கரி யோகசங்கரி
G. Yogasangari

நா.உ.
யாழ்ப்பாண மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1990
பின்வந்தவர் கே. சிறிநிவாசன்
தனிநபர் தகவல்
இறப்பு 19 சூன் 1990(1990-06-19)
கோடம்பாக்கம், சென்னை, இந்தியா
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

வீரசிங்கம் கணேசசங்கரி யோகசங்கரி (Veerasingam Ganeshasangari Yogasangari, இறப்பு: 19 சூன் 1990) இலங்கைத் தமிழ்ப் போராளியும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் சகோதரரான வி. கணேசசங்கரி என்பவரின் மகன் யோகசங்கரி ஆவார்.[1]

யோகசங்கரி 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2]

யோகசங்கரியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் 1990 சூன் 19 இல் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3][4] இப்படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (15 சூன் 2008). "Last TULF Leader standing: Sangaree at 75". த நேசன். http://www.nation.lk/2008/06/15/newsfe2.htm. 
  2. "Result of Parliamentary General Election 1989". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. Parthasarathy, R. (15 சூலை 1990). "A Massacre in Madras". தமிழ் டைம்சு IX (8): 9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3336/3336.pdf. 
  4. Rajasingham, K. T.. "Chapter 44: Eelam war - again". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DF15Df01.html. 
  5. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". த நேசன். http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  6. Subramanian, T. S. (14 ஆகத்து 1999). "Chronicle of murders". புரொன்ட்லைன் 16 (17). பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-1710. http://www.hindu.com/fline/fl1617/16171020.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._யோகசங்கரி&oldid=3083056" இருந்து மீள்விக்கப்பட்டது