க. மு. இராசகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. மு. இராசகோபால் (K. M. Rajagopal)(பிறப்பு 1924) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமோரூரைச் சார்ந்தவர். பள்ளிக் கல்வியினை வாலசாபாத்தில் கற்றுள்ளார். இராசகோபால், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக உத்திரமோரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 உத்திரமோரூர் திமுக 47,689 61.62
1971 உத்திரமோரூர் திமுக 48,462 68.85

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English - Tamil) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை “யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. Madras. 1968 [1967]. பக். 186. 
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 94. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._மு._இராசகோபால்&oldid=3538151" இலிருந்து மீள்விக்கப்பட்டது