உள்ளடக்கத்துக்குச் செல்

க. முத்துவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. முத்துவேல்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்கு. தனுக்கோடித் தேவர்
பின்னவர்காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி
தொகுதிமுதுகுளத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-07-01)1 சூலை 1946
நீராவி கரிசல்குளம்
இறப்பு23 சூலை 2016[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
தொழில்விவசாயி

க. முத்துவேல் (K. Muthuvel)(பிறப்பு: 1 ஜூலை 1946 - இறப்பு: 23 ஜூலை 2016) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் ஜூலை 1 1946ஆம் ஆண்டு கருப்பையாத்தேவர் இலட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக இராமநாதபுரம் கமுதி அருகேயுள்ள கரிசல்குளத்தில் பிறந்தார்.மாணவர் தலைவராகப் பல நடவடிக்கைகளில் பங்கேற்றார் இவர் வருவாய் ஆய்வாளராக இராமநாதபுர மாவட்டம் ஆர் எஸ். மங்கலத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் என். கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வழிகாட்டுதலின் கீழ் சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்தியத் தேசிய அரசியல் கட்சியான அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியில்சேர்ந்தார்.

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராமநாதபுரத்தின் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் இணை செயலாளரானார்.

1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கின் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கமுதியின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளையின் தலைவரான பின்னர் இவர், தென்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.assembly.tn.gov.in/archive/15th_2016/15_01.pdf
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2021-06-04.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 612-614.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._முத்துவேல்&oldid=4362812" இலிருந்து மீள்விக்கப்பட்டது