உள்ளடக்கத்துக்குச் செல்

க. பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. பொன்னுசாமி (K. Ponnusamy)(பிறப்பு 7 திசம்பர் 1942) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தினைச் சார்ந்தவர். மணப்பாறை அருகிலுள்ள ஏ. புதுப்பட்டி கிராமம் நவகுடியில் பிறந்தார். திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் இளநிலை சட்டம் பயின்ற பொன்னுசாமி கல்லூரி பேராசிரியராக 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் மேலும் வழக்கறிஞராகவும் தொழில் புரிந்து வந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த பொன்னுசாமி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 1989 மற்றும் 1991 ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டமன்ற துணை சபாநாயகராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2] அதிமுகவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் இவர் திமுகவில் இணைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Nadu Legislative Assembly "Who's Who" 1989. Madras: Tamil Nadu Legislative Assembly Secretariat. 01.12.1989 [1989]. p. 160. {{cite book}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |trans_title= (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |மொழி-= ignored (help)CS1 maint: date and year (link)
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார்-எவர்”. Madras: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை 600009. 01.04.1992 [1992]. p. 393. {{cite book}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help); Unknown parameter |மொழி-= ignored (help)
  3. https://tamil.oneindia.com/news/tamilnadu/former-minister-ponnusamy-rejoin-admk-196940.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பொன்னுசாமி&oldid=3412102" இலிருந்து மீள்விக்கப்பட்டது