க. பாக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

க. பாக்கியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு இவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியையாவார். மேலும், தற்போது, மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைமை பொறுப்பேற்று, பல்வேறு சமய, சமுதாய, இலக்கியச் சேவைகளில் செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், தொடர் கதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

  • முரண்பாடுகள் - (சிறுகதைத் தொகுப்பு)

தொடர்கதை[தொகு]

  • ஆத்மாவின் ராகங்கள்

பரிசுகளும், விருதுகளும்[தொகு]

இவரது படைப்புக்கள் மாநில, மற்றும் தேசிய அளவில் பல சாதனை விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பாக்கியம்&oldid=788798" இருந்து மீள்விக்கப்பட்டது