உள்ளடக்கத்துக்குச் செல்

க. தட்சிணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர்
க. தட்சிணாமூர்த்தி
ஸ்தபதி
ஸ்தபதி தட்சிணாமூர்த்தி
பிறப்புசூன் 19, 1962 (1962-06-19) (அகவை 61)
தேசியம்இந்தியர்
பணிபாரம்பரிய இந்திய கட்டடக்கலைஞர் & சிற்பி
பெற்றோர்சுவாமிநாதன் கருப்பையா ஆச்சாரி
உறவினர்கள்கணபதி (சிற்பி)
விருதுகள்கலைச்செம்மல்
வலைத்தளம்
www.sthapathi.info

க. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி என்பவர் தமிழ்நாட்டிலுள்ள இந்தியக் கட்டடக்கலை வல்லுநரும் (ஸ்தபதி) சிற்பியும் ஆவார். இவர் பாரம்பரிய இந்துக் கோயில் கட்டுமானம் மற்றும் சிற்பங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றவராவார். உலகம் முழுவதிலுமுள்ள பல இந்துக் கோவில்களை வடிவமைத்தும், புனரமைத்தும், நிர்மாணித்தும் இந்தியக் கட்டடக்கலையைப் பாதுகாத்து வருகிறார்.[1]

தனி வாழ்க்கை[தொகு]

1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் சுவாமிநாதன் கருப்பையா ஆச்சாரி (ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி) என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகிய நிறுவனங்களில் தலைமை ஸ்தபதியாக இருந்தவர் இவர் தந்தையாவார்.[2] கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை உருவாகிய தலைமைச் சிற்பி கணபதி இவரின் மாமா ஆவார்.[3] கோயில் கட்டிடக்கலையில் இளநிலை அறிவியல் பட்டமும் தத்துவம், கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் முதுநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4][5]

பொறுப்புகள்[தொகு]

இவர் பல்வேறு குழுக்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் பாரம்பரியக் குழுவில் வல்லுநராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[6] ஸ்தபதி கணபதியின் வாஸ்து வேத அறக்கட்டளையில் நிர்வாக அறங்காவலராகப் பதவி வகிக்கிறார்.[7] தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல் குழுவில் 2015 முதல் 2018 வரை உறுப்பினராக இருந்தார்.[8] திருப்பதியிலுள்ள டிடிடி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய சிற்பம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனத்தின் நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

இவர் கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பம் தொடர்பாகப் பல நூல்களும் உரைகளும் வழங்கியுள்ளார்.

 • இந்திய கட்டடக்கலையின் தன்னாய்வு, ஸ்தபதிய யோகா (ஆங்கிலம்)[9] இந்தியக் கோவில் கட்டடக்கலை பற்றிய விரிவான வழிகாட்டி
 • தர்மராஜ ரதத்தின் கட்டடக்கலை மரபு (ஆங்கிலம்) [10]
 • உளிஎழுத்துக்கள், பாரம்பரிய கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பற்றிய தமிழ் நூல்.[11]

விருதுகள்[தொகு]

 • தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கலைச்செம்மல் விருது
 • சிங்கப்பூர் ஜனாதிபதி ஸ்ரீ. எஸ்.ஆர். நாதன் அவர்களிடமிருந்து 'சில்ப கலா ரத்னம்' பட்டம்[4]
 • இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியிடமிருந்து 'தங்கப் பதக்கம்[4]
 • கனடாவில் உள்ள மாண்ட்ரீலில் ‘சில்ப சூடாமணி’ விருது[4]
 • கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா அவர்களிடமிருந்து 'வாஸ்து சில்பகலா சாகரம்'[4]

முக்கியக் கட்டுமானங்கள்[தொகு]

இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்த்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துள்ளார்.

 • பாரதிய வித்தியா பவனின் சன்ஸ்கிருதிக் கேந்திராவிலுள்ள இராமாயணா தரிசன அறை[12]
 • கருநாடக மாநிலம் முருதீசுவரா கோவிலில் இருபது அடுக்கு மாடங்களைக் கொண்ட இராஜகோபுரத்தை வடிவமைத்தார்.[13]
 • ஐக்கிய அமெரிக்காவில் கன்கார்ட்டிலுள்ள ஸ்ரீ சிவ முருகன் கோவிலைக் கட்டினார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. Muruganandham, T. (26 November 2018). "Hindu Religious and Charitable department to have manual on conservation of temples" (in en). The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/Nov/26/hindu-religious-and-charitable-department-to-have-manual-on-conservation-of-temples-1903285.html. 
 2. "Sculpting cultural landmarks" (in en-IN). The Hindu. 2 June 2011. https://www.thehindu.com/features/metroplus/sculpting-cultural-landmarks/article2070861.ece. 
 3. Today, Hinduism (1 January 2012). "Obituary: Honoring a Master Architect Who Changed the Landscape of India". Hinduism Today.
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 "பேச்சாளர்பற்றி". தமிழ்மரபு அறக்கட்டளை. http://www.tamilheritage.in/2022/10/science-of-temple-architecture.html. பார்த்த நாள்: 7 May 2024. 
 5. Correspondent, D. C. (24 June 2018). "Madras HC orders replacement of Sthapathi in panel for temple renovation" (in en). www.deccanchronicle.com. https://www.deccanchronicle.com/nation/current-affairs/240618/madras-hc-orders-replacement-of-sthapathi-in-panel-for-temple-renovati.html. 
 6. "Madras HC orders replacement of Sthapathi in panel" (in en). www.dtnext.in. 23 June 2018. https://www.dtnext.in/tamilnadu/2018/06/23/madras-hc-orders-replacement-of-sthapathi-in-panel. 
 7. "DR.V.GANAPATI STHAPATI MEMORIAL MANDAP". Vastu Vedic Trust (in ஆங்கிலம்).
 8. "Notification" (PDF). Tamilnadu Government Portal Content Management System. The Tamil Nadu Music and Fine Arts University, Chennai –. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
 9. Sthapati, PhD, Dakshinamoorthy (11 April 2022). The Introspection in Indian Architecture (in English). BUUKS. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5530-194-9.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 10. Sthapati, K.Dakshinamoorthy (2021). The Architectural Legacy of Dharmaraja Ratha: The Stand Point from Work Room (in ஆங்கிலம்). Buuks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90507-89-4.
 11. Uli Eeluththukkal.
 12. "'Bhavan's Sanskritik Kendra will become important monument of India'" (in en). www.thehitavada.com. https://www.thehitavada.com/Encyc/2023/7/6/-Bhavan-s-Sanskritik-Kendra-will-become-important-monument-of-India-.html. 
 13. "Murudeshwar Temple Now Tallest Gopuram in Asia" (in en). www.daijiworld.com. https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=45696#:~:text=Shetty%20said%20the%20Rajagopuram%20was%20built%20under,%E2%80%9CVivekanada%20Rock%E2%80%9D%20in%20Kanyakumari%20along%20with%20his. 
 14. Steiner, Tamara (13 February 2019). "Concord's Shiva Murugan temple breaks ground in elaborate ceremony -". pioneerpublishers.com. https://pioneerpublishers.com/concords-shiva-marugan-temple-breaks-ground-in-elaborate-ceremony/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._தட்சிணாமூர்த்தி&oldid=3950391" இலிருந்து மீள்விக்கப்பட்டது