க. ஜெயபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ஜெயபாலன்
பிறப்பு(1974-03-10)மார்ச்சு 10, 1974
ஆத்திப்பட்டு,செஞ்சி வட்டம்,விழுப்புரம் மாவட்டம்
தேசியம்இந்தியா
அறியப்படுவதுபேராசிரியர் , எழுத்தாளர்

க. ஜெயபாலன் (பிறப்பு:மார்ச் 10, 1974) என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

பிறப்பு, கல்வி[தொகு]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆத்திப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் பி.லிட்., (தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி , மயிலாடுதுறை, 1995), முதுகலை தமிழ் இலக்கியம் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1997) மற்றும் முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2007) பட்டங்களைப் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.[1] தற்போது சென்னையிலுள்ள நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[2]

நூல்கள்[தொகு]

இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களையும், 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல நூல்களைத்தொகுத்தும் உள்ளார்.[1] [2]

  1. மண்வாசணையும் திரைக்கலையும்
  2. திரைச்சிந்தனைகள்
  3. மு.வ.வும் காண்டேகரும்
  4. தமிழர் இலக்கியப்புரட்சி
  5. சேக்கிழார் கவித்திறம்
  6. பன்முகப்பார்வையில் பட்டுக்கோட்டை
  7. விமர்சன வேள்வி[3]
  8. பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பௌத்தம்
  9. பண்பாட்டுப் புரட்சியில் பௌத்தம்
  10. விசாகை (குறுங்காவியம்)
  11. அநாத பிண்டிகர் (குறுங்காவியம்)
  12. ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி)[4]
  13. வீ.வே முருகேசபாகவதர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் கவிதைகளும் (தொகுப்பு நூல்)[5]
  14. புத்தரும் அவர் சமயத்தின் எதிர்காலமும் (பதிப்பு நூல்)
  15. தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்[6]

விருதுகள்[தொகு]

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

  • சாதனையாளர் விருது (புத்தர் ஒளி பன்னாட்டு அமைப்பு, 2012)
  • பௌத்த ஆய்வாளர் விருது (இந்தியத் தமிழ்க் கவிஞர் மன்றம், 2013)
  • புத்த சுடரொளி தமிழ் விருது (இதய ரோஜா பதிப்பகமும் கவிதை சக்தி இயக்கமும் இணைந்து, 2013)
  • சிறந்த பௌத்த எழுத்து விருது (கலை இலக்கியப் பேரவை, 2021)

அயலகப்பயணம்[தொகு]

பௌத்தப் பயணமாக நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.[1] 19 மே 2023இல் இலங்கையில் பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தில் நடைபெற்ற தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் குறுந்தி விகார் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை அளித்துள்ளார்.[7]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், நூல், பக்.4-6
  2. 2.0 2.1 2.2 பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு (20ஆம் நூற்றாண்டு), தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னை, நவம்பர் 2014 நூலில் ஆசிரியர் குறிப்பு
  3. கூகுள் புக்ஸ்
  4. நூல் அரங்கம், தினமணி, 4 சூலை 2022
  5. இணையில்லா ஆல்ஆகி, காலச்சுவடு, அக்டோபர் 2021
  6. நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர், இந்து தமிழ் திசை, 8 அக்டோபர் 2022
  7. Symposium of the Buddhist Heritage of Kurundi and Buddhism in South India, Sri Lanka
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ஜெயபாலன்&oldid=3732386" இலிருந்து மீள்விக்கப்பட்டது