க. சோலைராசு
தோற்றம்
க. சோலைராசு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | மே. அ. இராசகுமார் |
| பின்னவர் | க. பொன்னுசாமி |
| தொகுதி | மருங்காபுரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூன் 1956 மணப்பாறை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
க. சோலைராசு (K. Sholairaj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையினைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டப் படிப்பினை முடித்த சோலைராசு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மருங்காபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]