க. செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்சு. குணசேகரன்
தொகுதிதிருப்பூர் (தெற்கு)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

க. செல்வராஜ் (K. Selvaraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பெருமாள் கோயில் தெருவினைச் சார்ந்தவர் ஆவார். செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் திருப்பூர் (தெற்கு) தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

நடைபெற்ற தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) மேற்கோள்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருப்பூர் (தெற்கு) தி.மு.க வெற்றி பெற்றது 43.59 எஸ்.குணசேகரன் அதிமுக 40.87 [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "Tiruppur (South) Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._செல்வராஜ்&oldid=3457723" இலிருந்து மீள்விக்கப்பட்டது