உள்ளடக்கத்துக்குச் செல்

கனகசபாபதி சிறீபவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(க. சிறீபவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீதியரசர்
கனகசபாபதி சிறீபவன்
Kanagasabapathy Sripavan
இலங்கையின் 44வது தலைமை நீதிபதி
பதவியில்
30 சனவரி 2015 – 28 பெப்ரவரி 2017
நியமிப்புமைத்திரிபால சிறிசேன
முன்னையவர்சிராணி பண்டாரநாயக்கா
பின்னவர்பிரியசாத் டெப்
மீயுயர் நீதிமன்ற துணைநீதியரசர்
பதவியில்
27 மார்ச் 2008 – 30 சனவரி 2015
முன்னையவர்நிகால் ஜயசிங்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 பெப்ரவரி 1952 (1952-02-29) (அகவை 72)
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

கனகசபாபதி சிறீபவன் (Kanagasabapathy J. Sripavan, பிறப்பு: 29 பெப்ரவரி 1952) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்தவர்.[1][2] இவர் உச்ச நீதிமன்ற துணைநீதிபதியாகவும், பிரதி சட்டமா அதிபராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும்,[3] பதில் பிரதம நீதியரசராகவும்[4] பணியாற்றியிருந்தார்.[5][6]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

நடராஜா கனகசபாபதி என்பவரின் மகனான சிறீபவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1962 முதல் 1972 வரை கல்வி பயின்றார்.[7] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் 1974 ஆம் ஆண்டில் இணைந்து 1976 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார்.[7] 1977 முதல் 1978 வரை வழக்கறிஞராகப் பணியாற்றிய சிறீபவன்,[7] 1978 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியில் சேர்ந்தார்.[7]

1996 பெப்ரவரி 22 இல் பிரதி சட்டமாதிபராக நியமிக்கப்பட்டார்.[7] 1992 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்துறை சட்ட டிப்புளோமா பட்டமும், 1994 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7]

2002 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[7] 2007 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெற்றார்.[9][10]

தலைமை நீதிபதி

[தொகு]

2013 சனவரியில் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கா சர்ச்சைக்குரிய முறையில் இலங்கை நாடாளுமன்றத்தினால் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு,[11] அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[12][13] அவருக்குப் பதிலாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[14][15] 2015 அரசுத்தலைவர் தேர்தலில் ராசபக்ச தோவியடைந்து மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். சிராணி பண்டாரநாயக்கா சட்ட விதிகளுக்கு அமைய பதவியில் இருந்து அகற்றப்படவில்லை எனவும், அது சட்டத்துக்கு முரணானது என்றும் கூறி அவரது பதவியை 2015 சனவரி 28 அன்று மீள்வித்தார்.[16][17][18] பண்டாரநாயக்கா பதவியில் அமர்ந்து அடுத்த நாள் சனவரி 29 அன்று தனது பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார்.[19][20][21] இதனை அடுத்து சிறீபவன் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக 2015 சனவரி 30 அன்று மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.[22][23][24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bastians, Dharisha (31 சனவரி 2015). "Sripavan takes office". Daily FT இம் மூலத்தில் இருந்து 2015-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202123553/http://www.ft.lk/2015/01/31/sripavan-takes-office/. 
  2. "Sri Lanka Appoints Minority Tamil as Top Judge". என்டிடிவி. ஏஎஃப்பி. 30 சனவரி 2015. http://www.ndtv.com/world-news/sri-lanka-appoints-minority-tamil-as-top-judge-735892. 
  3. "Welcome to Supreme Court Sri Lanka". இலங்கை மீயுயர் நீதிமன்றம்.
  4. "Justice K. Sri Pavan took oaths as Acting C J." பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013.
  5. "Senior Judge of the Supreme Court K. Sri Pavan is sworn-in as the Chief Justice before President". இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 30 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202123627/http://www.slbc.lk/index.php/component/content/article/1-latest-news/23511-senior-judge-of-the-supreme-court-k-sri-pavan-is-sworn-in-as-the-chief-justice-before-president-.html. 
  6. "Justice K. Sripavan today took oaths as the 44th Chief Justice of Sri Lanka". ஏசியன் டிரிபியூன். 30 January 2015. http://www.asiantribune.com/node/86319. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 Maniccavasagar, Chelvatamby (16 மார்ச் 2005). "Justice Sripavan to be felicitated". டெய்லிநியூசு இம் மூலத்தில் இருந்து 2012-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120729200356/http://www.dailynews.lk/2005/03/16/fea09.htm. 
  8. Malalasekera, Sarath (23 மார்ச் 2007). "No Court can function without industrious Bar - Justice Salaam". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2012-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120728230035/http://www.dailynews.lk/2007/03/23/news30.asp. 
  9. Malalasekera, Sarath (13 மே 2008). "Bench, Bar welcome new Supreme Court Judge Justice K. Sripavan". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2008-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080517022122/http://www.dailynews.lk/2008/05/13/news25.asp. 
  10. Samarasinghe, Sonali (23 மார்ச் 2008). "President caught in a judicial bind". த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035332/http://www.thesundayleader.lk/archive/20080323/issues.htm. 
  11. "Sri Lanka Chief Justice Shirani Bandaranayake is impeached". பிபிசி. 11 சனவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-20982990. 
  12. "CJ receives order of removal". டெய்லிமிரர். 13 சனவரி 2013. http://www.dailymirror.lk/top-story/24956-cj-receives-order-of-removal.html. 
  13. "President removes CJ". தெ நேசன். 13 சனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201175926/http://www.nation.lk/edition/breaking-news/item/14645-president-removes-cj.html. 
  14. "New Sri Lanka chief justice Mohan Peiris sworn in amid opposition". பிபிசி. 15 சனவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21022854. 
  15. Bulathsinghala, Frances (16 சனவரி 2013). "New CJ of Sri Lanka sworn in". டோன். http://dawn.com/2013/01/16/new-cj-of-sri-lanka-sworn-in/. 
  16. March, Stephanie (29 சனவரி 2015). "Sri Lanka reinstates impeached chief justice Shirani Bandaranayake". ஏபிசி. http://www.abc.net.au/news/2015-01-29/sri-lanka-reinstates-impeached-chief-justice/6054176. 
  17. "Sri Lanka's new president reverses 'revenge politics' of Rajapaksa regime". தி கார்டியன். அசோசியேட்டட் பிரெசு. 29 சனவரி 2015. http://www.theguardian.com/world/2015/jan/29/sri-lankas-new-president-reverses-revenge-politics-of-rajapaksa-regime. 
  18. "Sri Lanka reinstates impeached chief justice". மெயில் ஒன்லைன். ஏஎஃப்பி. 28 சனவரி 2015. http://www.dailymail.co.uk/wires/afp/article-2929526/Sri-Lanka-reinstates-impeached-chief-justice.html. 
  19. Balachandran, P. K. (28 சனவரி 2015). "Sirisena Sacks Chief Justice Peiris and Reinstates Bandaranayake". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Sirisena-Sacks-Chief-Justice-Peiris-and-Reinstates-Bandaranayake/2015/01/28/article2641056.ece. 
  20. "Shirani retires; Sripavan to be appointed CJ today". தி ஐலண்டு. 30 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150531150735/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=118588. 
  21. "Sri Lanka reinstates Chief Justice Shirani Bandaranayake". பிபிசி. 28 சனவரி 2015. http://www.bbc.co.uk/news/world-asia-31021540. 
  22. "Tamil Sripavan appointed Sri Lanka's top judge". பிபிசி. 30 சனவரி 2015. http://www.bbc.co.uk/news/world-asia-31068699. 
  23. "Sripavan sworn in as CJ". டெய்லி மிரர். 30 சனவரி 2015. http://www.dailymirror.lk/62585/sripavan-sworn-in-as-cj. 
  24. "ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்கியது செல்லுபடியற்றது". தினகரன். 31 சனவரி 2015. http://www.thinakaran.lk/2015/01/31/?fn=n1501311. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகசபாபதி_சிறீபவன்&oldid=3792782" இலிருந்து மீள்விக்கப்பட்டது