க. கோ. கிருஷ்ணசாமி
தோற்றம்
கல்லாங்காட்டுப்புதூர் கோவிந்தசாமி கிருஷ்ணசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | ஆர். கே. எசு. தண்டபாணி |
| பின்னவர் | கே. சி. பழனிசாமி |
| தொகுதி | காங்கேயம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 சூன் 1929 கவுண்டம்பாளையம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| பிள்ளைகள் | 1 |
| தொழில் | விவசாயி |
க. கோ. கிருஷ்ணசாமி (K. G. Krishnasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் காங்கேயம் பகுதியினைச் சேர்ந்தவர். பெரியநாயக்கன்பாளையம், இராமகிருஷ்ணா மடப் பள்ளி, திருப்பத்தூர் கெ. சுப்பிரமணிய செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]