க. அ. செல்லப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. அ. செல்லப்பன் என்றும் பாரி செல்லப்பன் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு தமிழ் பதிப்பாளர் ஆவார். இவர் பாரி நிலையம் பதிப்பகத்தைத் துவக்கியவர். 1996 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த புத்தகப் பதிப்பாளருக்கான விருதுப் பெற்றவர்.

க.அ.செல்லப்பன்
பாரி செல்லப்பன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூலை 1920
அரிமளம், புதுக்கோட்டை ஸ்டேட்.
பெற்றோர்அடைக்கப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி

வாழ்க்கை[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் 19 சூலை 1920 இல் அடைக்கப்ப செட்டியார், அழகம்மை ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பத்து வயதில் பர்மாவுக்குச் சென்றார். அங்கேயே பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போர் காரணமாக நடந்தே தாயகம் திரும்ப நேரிட்டது.[1] சிறு வயதிலிருந்தே படிக்கும் ஆர்வம் இருந்த காரணத்தினால், திருச்சி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

பதிப்பகம்[தொகு]

சென்னை முல்லை பதிப்பகம் முல்லை முத்தையாவின் ஊக்கத்தின் காரணமாக, 1964 இல் சென்னையில் பாரி நிலையம் பதிப்பகத்தைத் துவக்கினார். அன்றைய பதிப்பாளர்கள் பலர் தாங்களே புத்தகங்களை எழுதி வெளியிட்டு வந்தனர். இவர் பிற எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் எழுதிய புத்தகங்களை வாங்கி விற்பனை உரிமையைப் பெற்று, வெளியிட்டுப் பெரும் வரவேற்பை பெற்றார்.

இராஜாஜி, மு. வரதராசனார், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கி. ஆ. பெ. விசுவநாதம், மீ. ப. சோமு, வ. சுப. மாணிக்கம் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தையும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையைக் கொண்டு செப்பம் செய்வித்து இரண்டு பகுதிகளாக வெளியிட்டார். அறிஞர் அண்ணா எழுதிய தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 21 தொகுதிகளாக வெளியிட்டார். இவர் வெளியிட்ட பல நூல்கள் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளன. [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அ._செல்லப்பன்&oldid=3172625" இலிருந்து மீள்விக்கப்பட்டது