க. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(க.அன்பழகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பேராசிரியர் க. அன்பழகன்
2 Anna 037.jpg
முன்னாள் தமிழ்நாட்டு நிதியமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 14, 1922 (1922-12-14) (அகவை 95)[1]
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க.
வாழ்க்கை துணைவர்(கள்) வெற்றிசெல்வி
இருப்பிடம் சென்னை
கல்வி முதுகலைமானி தமிழ்

க.அன்பழகன் (பிறப்பு: திசம்பர் 19, 1922)[2] ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.[3]

இளமைப் பருவம்[தொகு]

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.[4]

பொது வாழ்க்கை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.

”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.

எழுத்துப் பணி[தொகு]

எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் பின்வறுமாறு:

  1. அழகுராணி [5]
  2. இன-மொழி வாழ்வுரிமைப் போர்
  3. உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
  4. தமிழர் திருமணமும் இனமானமும்
  5. தமிழினக்காவலர் கலைஞர்
  6. தமிழ்க்கடல்
  7. தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
  8. தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
  9. தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறாதா தமிழக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)
  10. நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
  11. வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை. [6]
  12. வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
  13. விடுதலைக் கவிஞர்
  14. விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
  15. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

குடும்பம்[தொகு]

இவர் வெற்றிச்செல்வி என்பவரை மணந்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: 17-2-1952[7] ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு ஆகிய இரு ஆண்மக்களும் ஜெயக்குமாரி என்னும் ஒரு பெண்மகவும் பிறந்தனர் [8] சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார்.
க. அன்பழக்கனுக்கு புலவர் க. திருமாறன் என்னும் தம்பி உள்ளார். அவர் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது. [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்".
  2. "திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்".
  3. https://www.thenewsminute.com/article/veteran-dmk-leader-k-anbazhagan-not-contest-election-41585
  4. http://www.thehindu.com/elections/tamilnadu2016/tn-assembly-polls-spry-at-94-dmks-professor-loves-the-lectern/article8557725.ece
  5. திராவிடநாடு (இதழ்) நாள்:30-3-1952, பக்கம் 9
  6. திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 3
  7. திராவிடநாடு (இதழ்) நாள்:2-3-1952, பக்கம் 11
  8. https://tamil.oneindia.com/news/2013/05/06/tamilnadu-now-k-anbazhagan-faces-family-dispute-174763.html
  9. திராவிடநாடு (இதழ்) நாள்:2-10-1955, பக்கம் 10
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அன்பழகன்&oldid=2600305" இருந்து மீள்விக்கப்பட்டது