க்யா மஸ்த் ஹே லைஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kya Mast Hai Life
வடிவம் Teen Sitcom
தயாரிப்பு Buena Vista International
SOL
இயக்குனர் Aarif Shaikh
நடிப்பு See below
துவக்க இசை Kya Mast Mast Hai Life by Sangeeth Haldipur and Vasudha Varma
நாடு India
மொழி Hindi
பருவங்கள் எண்ணிக்கை 2(season 3 is in pre-production)
மொத்த  அத்தியாயங்கள் 56 (as of season 2)
தயாரிப்பு
ஒளிபரப்பு நேரம் appr. 25 minutes
ஒளிபரப்பு
மூல அலைவரிசை Disney Channel India
மூல ஓட்டம் April 27, 2009 – Present

க்யா மஸ்த் ஹே லைஃப் என்பது ஒரு இந்தித் தொலைக்காட்சித் தொடர். இது டிஸ்னி சேனல் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டு ஏப்ரல் 27, 2009ம் தேதியன்று வெளியிடப்பட்டது, முன்னதாக ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ம் தேதிகளில் படப்பிடிப்புக் காட்சிகள் முன்னோட்டமாக ஒளிபரப்பப்பட்டன. ராகினி, ஜீஷான், ஜெனியா, வீர் மற்றும் ரீத்து ஆகிய ஐந்து இளவயதினரின் வாழ்க்கையை இத்தொடர் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

ராகினி ஜுனேஜா என்ற ராக்ஸ், விடலைப் பருவத்துப் பெண். இவள் பாலிவுட் திரைத்துறையின் மெகா ஸ்டார் "சுஷ்மிதா ஜுனேஜாவின்" மகள். ரெட்ஃபீல்ட் அகாடமி என்ற கல்லூரியில் இளநிலை வரைகலை வகுப்பில் சேரும் ராகினி, சிறுவயதிலிருந்தே இணைபிரியாமல் இருக்கும் நண்பர்களான ஜெனியா கான், ஜீஷான் கான், வீர் மெஹ்ரா மற்றும் ரீத்து ஷா ஆகியோரைச் சந்திக்கிறாள். தான் ஒரு பிரபல நடிகையின் மகள் என்பதை வெளியில் கூற விரும்பாத அவள், அனைவரிடமும் தனது தாயார் ஒரு மழலைப் பள்ளி ஆசிரியை என்று பொய் சொல்கிறாள். முறையாக சங்கீதம் கற்றிருந்த போதும், தனக்கு பாட வராது என்றும் அனைவரிடமும் கூறுகிறாள். ராகினி எப்போதும் பாரீஸ் நகரில் உள்ள விலை உயர்ந்த பிரபல "லா ஃபெம்மி" வகை உடைகளைத் தான் வாங்கி அணிவாள். ராகினியின் லா ஃபெம்மி டிசைனர் உடைகளைப் பார்த்து வியந்து போகும் டிட்லிஸ், தங்களது வசதி படைத்த நண்பர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கிறாள். இதை மறுக்கும் ராகினி, அந்த உடைகள் ஹிமேஷ் என்ற தையல்காரர் அளித்தது என்று பொய் சொன்னதோடு, ஞாயிற்றுக் கிழமையன்று அந்த உடையைத் தைத்து, தனக்கு முப்பது சதவீத சலுகையில் தருவதாகவும் கூறுகிறாள். தனது மெய்க்காப்பாளரான திரு. சோட்டுவை, தன் தந்தையின் கார் ஓட்டுநர் என்று பொய் சொல்கிறாள். அவளது மழுப்பலை நம்பாத நண்பர்கள், அவள் யாரென்பதைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைகின்றனர், ஏராளமான பொய்களைக் கூறும் அவளை நம்பக்கூடாது என்பதிலும் உறுதியுடன் உள்ளனர். ஆனால் அதன் பின் ராகினியின் தூய்மையான நட்பைப் புரிந்து கொள்ளும் நண்பர்கள், அவளைப் பிரியவே கூடாது என்ற நிலைக்கு வருகின்றனர்.

தயாரிப்பு[தொகு]

இந்த ஆண்டு டிஸ்னி சேனலின் கிட்சென்ஸ் 3 என்ற, விடலைப் பருவத்தினரைப் பற்றிய துல்லியமான ஆய்வின் சாராம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

வால்ட் டிஸ்னி டெலிவிஷன் இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன்டாய்ன் வில்லெனியுவ் கூறும்போது, "இன்றைய இளைய வயதினர் புத்திசாலிகளாகவும், வித்தியாசமானவர்களாகவும் உள்ளனர். க்யா மஸ்த் ஹே லைஃப் தொடரானது, இளவயதினரையும், அவர்களது குடும்பங்களையும், அவர்களது உலகம் மற்றும் குடும்பச் சூழலை சுவாரஸியமாக எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, இது டிஸ்னி சேனலின் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது" என்கிறார். இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பொறுப்பை, எஸ்ஓஎல் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் சேனல் ஒப்படைத்தது.[1] [தொடர்பிழந்த இணைப்பு]

எஸ்ஓஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஃபஸிலா அல்லானா கூறும் போது, "முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை, முன்னணியில் உள்ள இளவயது மற்றும் குடும்பத்துக்கான தொலைக்காட்சி சேனலான டிஸ்னியுடன் சேர்ந்து தயாரிப்பது எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. கற்பனை அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி விழாக்களை தயாரிப்பதில் எஸ்ஓஎல் பெயர் பெற்றது. கற்பனைக் கதைப் பிரிவில் க்யா மஸ்த் ஹே லைஃப் போன்ற வெற்றிப் படைப்புகளை உருவாக்க விரும்புகிறோம்"என்றார்.[1] [தொடர்பிழந்த இணைப்பு]

நடிப்பு[தொகு]

 • ராகினி ஜுனேஜா - நஜ்னீன் கானி
 • ஜீஷான் கான் - ஆஷிஷ் ஜுனேஜா
 • ஜெனியா கான் - ஸ்வேதா த்ரிபாதி
 • வீர் மெஹ்ரா - ஷஹீர் ஷேக்
 • ரீத்து சிங் - சானா ஷேக்
 • சுஷ்மிதா ஜுனேஜா - மனினீ தே
 • ஜாங்கோ - பிரபால் பஞ்சால்
 • கிம்மி - விஷாகா துக்ரா
 • டியா - ரீனா அகர்வால்
 • ரியா - சுமனா தாஸ்
 • ராமு காகா - மன்மாவ்ஜி
 • பரேஷ் பாய் - தேவன்ஷ் தோஷி
 • டிஸ்கோ - பிரபால் பஞ்சாபி

பரிந்துரைகள்[தொகு]

 1. 1.0 1.1 "Disney Channel launches tween show ‘Kya Mast Hai Life’". IndiaInfoline (2009-04-03). பார்த்த நாள் 2009-09-05.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க்யா_மஸ்த்_ஹே_லைஃப்&oldid=1354470" இருந்து மீள்விக்கப்பட்டது