கௌஹர் ஜான்
கெளஹர் ஜான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஏஞ்சலினா எவர்டு |
பிறப்பு | ஆசாம்கார், உத்தர பிரதேசம், இந்தியா | 26 சூன் 1873
இறப்பு | 17 சனவரி 1930 இந்தியா | (அகவை 56)
இசை வடிவங்கள் | கசல், தும்ரி, தாத்ரா |
தொழில்(கள்) | இசை, நடனம் |
இசைத்துறையில் | 1900–1930 |
கெளஹர் ஜான் (Gauhar Jaan, 26 சூன் 1873 – 17 சனவரி 1930) கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்துஸ்தானி இந்தியப் பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவரின் இயற்பெயர் ஏஞ்சலினா எவர்டு (Angelina Yeoward) என்பதாகும். இந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைதட்டுகளில் இவரது பாடல்கள் பதியப்பட்டு இந்திய கிராமபோன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[1][2]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கெளஹர் ஜான் பிறப்பால் ஏஞ்சலினா எவர்டு என்று அறியப்படுபவர். 26 சூன் 1873 ஆம் ஆண்டில் ஆசாம்கார் என்னும் இடத்தில் ஆர்மீனிய வம்சாவழியில்[3] பிறந்தார். அவரது தந்தை வில்லியம் ராபர்ட் எவர்டு ஒரு உலர் பனிக்கட்டி ஆலையில் பொறியியலாளராக பணியாற்றினார். 1872 ஆம் ஆண்டில் கெளஹரின் தாயார் விக்டோரியா ஹெமிங்ஸை திருமணம் செய்து கொண்டார். விக்டோரியா பிறப்பால் ஒரு இந்தியப் பெண். மேலும் இந்திய இசை மற்றும் நடனத்தில் பயிற்சி பெற்றவர்.
துரதிருஷ்டவசமாக, வில்லியம் மற்றும் விக்டோரியாவிற்கும் இடையேயான திருமணம் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. விக்டோரியா குர்ஷெத் என்ற ஒரு நண்பருடன் நட்பை வளர்த்தார். இதனால் ஏஞ்சலினாவின் பெற்றோர் 1879 இல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்து செய்த பிறகு, திருமதி. எவர்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, மாலக் ஜான் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார், மேலும் அவரது மகளுக்கு கௌஹர் ஜான் என்று பெயரிட்டார். கெளஹருக்கு "கௌரா" என்ற புனைப்பெயரை வைத்திருந்தார். கெளஹரின் தாயாரை "பாடி" மாலக் ஜான் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அந்த நேரத்தில் மூன்று பிரபலமான மாலக் ஜான்ஸ் இருந்தார்கள், பாடி என்றால் அவர் மாலக் ஜான்களில் மூத்தவர் என்று குறிப்பிடப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 'First dancing girl, Calcutta'
- ↑ About us பரணிடப்பட்டது 25 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Sa Re Ga Ma.
- ↑ Savitha Gautam (13 May 2010). "The Hindu : Arts / Music : Recording Gauhar Jaan". Beta.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
- ↑ "Biography of Gauhar Jan".