கௌரி விசுவநாதன்
கௌரி விசுவநாதன் Gauri Viswanathan | |
|---|---|
| பிறப்பு | 5 நவம்பர் 1950 கல்கத்தா (தற்போது கொல்கத்தா), மேற்கு வங்காளம், இந்தியா |
| விருதுகள் | இயேம்சு ரசல் லோவெல் பரிசு (1998) குக்கனெய்ம் உறுப்பினர் (1990) |
| கல்விப் பின்னணி | |
| கல்வி |
|
| கல்விப் பணி | |
| துறை | ஆங்கில இலக்கியம் |
| கல்வி நிலையங்கள் | |
கௌரி விசுவநாதன் (Gauri Viswanathan) ஓர் இந்திய அமெரிக்க கல்வியாளராவார். 1933 ஆம் ஆண்டுப் பிரிவின் மானுடப்புலப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மேற்கு வங்காளத் தலைநகர் கல்கத்தா-வில் (தற்போது கொல்கத்தா) 5 நவம்பர் 1950 அன்று பிறந்தார் கௌரி விசுவநாதன். இவர் பெற்றோர் ஐக்கிய நாடுகள் அவை (ஐநா) அலுவலர்கள் ஆவர்.[2]
தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[1][2] பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானிய மற்றும் காலனித்துவ கலாச்சார ஆய்வுகளில் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.[2]
1989 ஆம் ஆண்டில் வெற்றியின் முகமூடிகள் என்ற தலைப்பில் இவர் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி மற்றும் இலக்கிய ஆய்வு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இது நவீன மொழி சங்கத்தின் இயேம்சு ரசல் லோவெல் பரிசை வென்றது,[3] 1998 ஆம் ஆண்டில் இவர் எழுதிய மடிப்புக்கு வெளியே என்ற தலைப்பிலான மதமாற்றம், நவீனத்துவம் மற்றும் நம்பிக்கை குறித்த நூல் அமெரிக்க ஒப்பீட்டு இலக்கிய சங்கம் வழங்கிய ஆரி லெவின் பரிசை வென்றது.[2] கௌரி 1990 ஆம் ஆண்டில் குக்கனெய்ம் உறுப்பினர் தகுதியையும் 1986 ஆம் ஆண்டில் மெலன் அறக்கட்டளை உறுப்பினர் தகுதியையும் பெற்றார்.[4] .
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Gauri Viswanathan | The Department of English and Comparative Literature". english.columbia.edu. Retrieved 2022-06-13.
- 1 2 3 4 "Rediff On The NeT: Columbia Professor Wins Major Prize". www.rediff.com. Retrieved 2022-06-13.
- ↑ "James Russell Lowell Prize Winners". Modern Language Association (in ஆங்கிலம்). Retrieved 2022-06-14.
- ↑ "Gauri Viswanathan". John Simon Guggenheim Memorial Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-13.