கௌரி ஜாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரி ஜாக்
பிறப்பு1970
நாக்பூர்

கௌரி ஜாக் (Gauri Jog), ஒரு கதக் நடனக் கலைஞர்; நடன இயக்குனர் மற்றும் சிகாகோவைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர் ஆவார். இவர் கதக் நடனத்தை பயின்று வருகிறார். மேலும் லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் கரானாவின் நிபுணத்துவம் பெற்ற நடனக் கலைஞராக கருதப்படுகிறார். இவர், 1999 முதல் இந்தியன் டான்ஸ் ஸ்கூல் என்கிற நடனப்பள்ளியை நடத்தி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

கௌரி ஜாக் 1970 இல் நாக்பூரில் பிறந்தார். மேலும் லக்னோ கரானாவின் குரு மதன் பாண்டேவிடம் இருந்து தீவிரமான, பயிற்சியைப் பெற்றார். இவரது குரு, தாள அடிச்சுவடுகளையும் அதன் வரிசைமாற்றங்களையும் வலியுறுத்தினார். அபிநயம் கலைக்கு பெயர் பெற்ற ஜெய்ப்பூர் கரானாவின் லலிதா ஹர்தாஸிடமிருந்து கதக் நடனத்தையும் பயின்றார். மும்பையைச் சேர்ந்த மதுரிதா சாரங்கிடமிருந்தும் கற்றுக் கொண்டார்.

இவர் தனது 5வது வயதில் நடனப் பயிற்சியைத் தொடங்கினார், மேலும் 7 வயதாக இருந்தபோது தனது முதல் அரங்கேற்றத்தைச் செய்தார். கௌரி ஜாக், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் கல்வியில் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பண்டிட் பிர்ஜு மகாராஜ் உட்பட இந்தியாவைச் சேர்ந்த பிரபல கதக் குருக்களின் ஏராளமான பட்டறைகளில் கலந்து கொண்டார். இவர் லக்னோ மற்றும் கதக்கின் ஜெய்ப்பூர் கரானா ஆகியவற்றின் கலவையைப் பயிற்சி செய்கிறார்.

இவரது, திறமை, நல்ல கல்வி பின்னணி மற்றும் கற்பிப்பதில் ஆர்வம் ஆகியவை வெற்றிகரமான நடன கலைஞராகவும், நடன இயக்குனராகவும், நடனப் பள்ளியின் இயக்குநராகவும் இருக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

நடனப்பள்ளி[தொகு]

கதக் நடனம் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கற்றுக்கொள்வதற்கும் இ.ஐ.என் 26-3110772 உடன் ஐ.ஆர்.எஸ் பிரிவு 501 (3) (சி) இன் கீழ் கௌரி ஜாக் உருவாக்கிய ஒரு தொண்டு நிறுவனம் இந்தியன் டான்ஸ் ஸ்கூல் என அழைக்கப்படும் நடனப்பள்ளி ஆகும். இது, 1999இல், தொடங்கப்பட்டது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை நடன பயிற்சி, இந்திய நாட்டுப்புற நடனம், கதக், பரதநாட்டியம் மற்றும் குச்சுபுடி போன்றவற்றில் பயிற்சி அளித்துள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு இப்பள்ளி இலவச கதக் நடனக் கல்வியை வழங்குகிறது. மேலும், இப்பள்ளி ஆன்லைன் கதக் கல்வியையும் வழங்குகிறது. 1999 முதல் கௌரி ஜாக் [1] மற்றும் அவரது குழுவினர் வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 325 க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர்.

படைப்புகள்[தொகு]

இவரது படைப்புகளில் கிருஷ்ணா லீலா,[2] சகுந்தலா, ஜான்சி கி ராணி, கதக் யாத்திரை,[3] கிழக்கும், மேற்கும் சந்திக்கிறது, தீ - உமிழும் கதை போன்றவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.[4] கதக் நடனத்தில் உள்ள தொழில்நுட்ப கூறுகள் மூலம் பாரம்பரியமான "கதை சொல்லும் கலை" யை இவர் உயிர்ப்பிக்கிறார். சில பாலிவுட் நடன அசைவுகள் மற்றும் யோகாவை கதக்கில் இணைப்பதற்கான அவரது தனித்துவமான அணுகுமுறையின் காரணமாக, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இவர் மிகவும் பிரபலமாக உள்ளார். அதே நேரத்தில் பாரம்பரியத்தின் எல்லைகளை கடக்காமல் பார்த்துக்கொள்கிறார். கதக் நடனத்தை, ஃபிளமெங்கோ, பரதநாட்டியம், ஒடிஸி, மெக்ஸிகன் மற்றும் அமெரிக்கன் பாலே ஆகியவற்றுடன் இணைக்கும் அவரது சோதனைகள் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. Artist India Gallery, Artist Gauri Jog, 17 January 2006
  2. "Asian Media USA, Krishna Leela – an artistic portrayal of Lord Krishna's life story, 14 April 2014". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Jog/articleshow/12452430.cms Times Of India, Journey of Indian dance by Gauri Jog, 29 March 2012
  4. Narthaki, Fire – the Fiery Tale - Gauri Jog and her group captivate the audience, 17 March 2007

அதிகாரப்பூர்வ வலைத்தளம்[தொகு]

Gauri Jog

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_ஜாக்&oldid=3929476" இலிருந்து மீள்விக்கப்பட்டது