கௌரி சிண்டே
கௌரி சிண்டே | |
|---|---|
2015இல் ஒரு விருது வழங்கும் விழாவில் கௌரி சிண்டே | |
| பிறப்பு | 6 ஜூலை 1974 புனே, மகாராட்டிரம், இந்தியா |
| தேசியம் | |
| பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
| அறியப்படுவது | இங்கிலீஷ் விங்கிலிஷ் (2012) டியர் ஜிந்தகி (2016) |
| வாழ்க்கைத் துணை | ஆர். பால்கி (தி. 2007) |
கௌரி சிண்டே (Gauri Shinde) (பிறப்பு ஜூலை 6,1974) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலிஷ் (2012) படத்தின் மூலம் கௌரி சிண்டே இயக்குநராக அறிமுகமானார். பைனான்சியல் டைம்ஸ் இதழின் 2012 இன் ‘கவனிக்கப்பட வேண்டிய 25 இந்தியர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.[1] ரெடிப்பின் ‘2012 ஆம் ஆண்டின் பாலிவுட்டின் 5 சிறந்த இயக்குநர்கள்’ பட்டியலிலும் இவர் இடம்பெற்றார்.[2]
இளமை வாழ்க்கை
[தொகு]கௌரி சிண்டே புனேவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தொடர்பு துறையில் பட்டம் பெற்றார்.[3][4] இவரது கல்லூரிப் பருவத்திலிருந்தே இவருக்கு திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் தொடங்கியது.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]ஆவணப்பட இயக்குனர் சித்தார்த் கக்குடன் பயிற்சிக்காக மும்பைக்குச் சென்ற ஷிண்டே, ஆர். பால்கி படைப்பு இயக்குநராக இருந்த ஐபிடபிள்யூ, பேட்ஸ் கிளாரியன் மற்றும் லோவ் லிண்டாஸ் போன்ற விளம்பர நிறுவனங்களுடன் பணியாற்றத் தொடங்கினார். அடுத்த ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களையும் குறும்படங்களையும் தயாரித்தார். இவரது குறும்படம் ஓ மேன்! (2001) பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[6]
புனேவில் ஊறுகாய் வணிகத்தை நடத்திவந்த தனது உறவினர் ஒருவர் வாழ்க்கையில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டு இங்கிலீஷ் விங்கிலிஷ் (2012) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கௌரி சிண்டே அறிமுகமானார். ஆங்கிலம் சரியாக பேசத்தெரியாத மராத்தி பேசும் இவரது உறவினருக்கு ஏற்பட்ட பிரச்சனை கௌரியை சங்கடப்படுத்தியது. இந்த படம் 14 செப்டம்பர் 2012 அன்று தொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் அக்டோபர் 5,2012 அன்று வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[7] சிறந்த அறிமுக இயக்குனருக்கான பிலிம்பேர் விருதைத் தவிர, பாலின உணர்திறனுக்கான ‘லாட்லி தேசிய ஊடக விருதும்’ இவருக்கு வழங்கப்பட்டது.
கௌரி சிண்டே 2007 இல் திரைப்பட இயக்குனர் ஆர். பால்கியை மணந்தார்.[8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "25 Indians to Watch". Financial Times. 16 November 2012.
- ↑ Rediff. "Bollywood's 5 Best Directors of 2012".
- ↑ "I am a better director than Balki: Gauri Shinde". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 October 2012 இம் மூலத்தில் இருந்து 31 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031033150/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-07/news-interviews/34294577_1_balki-gauri-shinde-feature-film.
- ↑ "Personal agenda: Gauri Shinde, film director". Hindustan Times. 8 February 2013 இம் மூலத்தில் இருந்து 11 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130211002657/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/Personal-agenda-Gauri-Shinde-film-director/Article1-1008678.aspx.
- ↑ "A minute with Gauri Shinde on English Vinglish". 12 September 2012 இம் மூலத்தில் இருந்து 6 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306173043/http://in.reuters.com/article/gauri-shinde-english-vinglish-idINDEE88B0EL20120912.
- ↑ "Symbiosis to honour director Gauri Shinde". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 January 2013 இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214180040/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-19/pune/36431165_1_cultural-programme-symbiosis-institute-symbiosis-principal-director.
- ↑ Hindustan Times. "English Vinglish". Archived from the original on 7 July 2015.
- ↑ "I am a better director than Balki: Gauri Shinde". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 October 2012 இம் மூலத்தில் இருந்து 31 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031033150/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-07/news-interviews/34294577_1_balki-gauri-shinde-feature-film."I am a better director than Balki: Gauri Shinde". The Times of India. 7 October 2012. Archived from the original on 31 October 2012. Retrieved 11 February 2013.
- ↑ "What keeps Sridevi glowing at 49?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 August 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/What-keeps-Sridevi-glowing-at-49/articleshow/16069521.cms.
- ↑ "The Big B is brilliant: Gauri Shinde". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 September 2012 இம் மூலத்தில் இருந்து 23 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023071850/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-11/news-interviews/33762262_1_gauri-shinde-mehdi-nebbou-r-balki.
