கௌரி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரி கான்
2016இல் ஒரு விழாவில்
பிறப்புகௌரி சிப்பர்
8 அக்டோபர் 1970 (1970-10-08) (அகவை 53)
புது தில்லி, தில்லி, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்லேடி ஸ்ரீராம் மகளீர் கல்லூரி
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், உட்புற வடிவமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்பொழுதுவரை
வாழ்க்கைத்
துணை
சாருக் கான் (தி. 1991)
பிள்ளைகள்3

கௌரி காளி கான் (Gauri Kali Khan) (பிறப்பு 8 அக்டோபர் 1970), ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர். இவர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர் [1] , ஜாக்குலின் பெர்னாண்டஸ் [2] மற்றும் சிதார்த் மல்ஹோத்ரா[3] போன்றவர்களுக்கு உட்புற வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளார் . ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மென்ட் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இணை-நிறுவனர் மற்றும் இணைத் தலைவராக செயல்படுகிறார். 2018 ஆம் ஆண்டில், ஃபார்ச்சூன் இதழின் "உலகின் 50 சக்தி வாய்ந்த பெண்கள்" என்ற பட்டியலில் கௌரியின் பெயர் இடம் பெற்றது.[4]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கௌரி தில்லியில், பஞ்சாபி இந்து மத பிராமணப் பெற்றோர்களான சவிதா மற்றும் கர்னல் ரமேஷ் சந்திர சிப்பர் அகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[5] லொரேட்டோ கான்வெண்ட் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தில்லி மாடர்ன் ஸ்கூலில் இருந்து பன்னிரண்டாவது நிறைவு பெற்றார்; லேடி ஸ்ரீ ராம் மகளீர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார் . அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜியில் 6 மாத கால ஆடை வடிவமைப்பு படிப்பை முடித்து [1], தனது தந்தையின் ஆடை வியாபாரத்தால் தையல் கற்றுக்கொண்டார்.[6]

கௌரி கான் தனது கணவர் சாருக் கான் உடன் 2012 இல்
2017 ஆம் ஆண்டில் தனது மகள் சுஹானா கானுடன் ஒரு நிகழ்ச்சியில் கௌரி.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாருக் கானை 1984 ஆம் ஆண்டில் தில்லி நகரில் கௌரி முதல் முறையாக சந்தித்தார். அப்பொழுது சாருக் கான் பாலிவுட்டில் நடிக்கத் துவங்கவில்லை.[7] ஆறு வருட காலம் காதலித்த பின்பு இவர்கள் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.[8]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "I don't want to make my business mass: Gauri Khan" (in ஆங்கிலம்).
  2. "Gauri Khan revamps Jacqueline Fernandez's apartment, shares pics on Instagram" (in ஆங்கிலம்).
  3. "Gauri Khan designs Sidharth Malhotra's new home, Shah Rukh says they stole his hammock" (in ஆங்கிலம்).
  4. "Shah Rukh Khan calls wife Gauri their family's 'fortunate, most powerful' as she features on power list" (in ஆங்கிலம்).
  5. "Gauri Khan Biography". Movies Dosthana. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
  6. "Gauri Khan". http://www.planetsrk.com/community/threads/gauri-khan.1863/. பார்த்த நாள்: 2016-12-08. 
  7. "Famous inter-religious marriages". Archived from the original on 3 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  8. "B'day Special: Shah Rukh Khan (p. 16)" இம் மூலத்தில் இருந்து 9 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141109191757/http://photogallery.indiatimes.com/celebs/bollywood/shah-rukh-khan/bday-special-shah-rukh-khan/articleshow/25059326.cms. பார்த்த நாள்: 3 September 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கௌரி கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_கான்&oldid=3552499" இலிருந்து மீள்விக்கப்பட்டது