கௌரா (திருவிழா)
கௌரா பர்வா | |
---|---|
கௌரா பர்வா திருவிழா நேபாளம் | |
அதிகாரப்பூர்வ பெயர் | गौरा पर्व |
பிற பெயர்(கள்) | கமரா, சதன்-அத்தன், சது-அத்து, கோரா |
கடைபிடிப்போர் | நேபாளி & குமோனி மக்கள் இந்து |
வகை | இந்து |
முக்கியத்துவம் | சிவன் &பார்வதி திருமணம் |
தொடக்கம் | புரட்டாசி பஞ்சமி |
முடிவு | புரட்டாசி அட்டமி |
கௌரா பர்வா (Gaura (festival)) என்பது சுதுர்பஷ்சிம் மாகாணம் மற்றும் நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். [1] [2] இந்த திருவிழா பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்ததை நினைவுபடுத்துகிறது. இந்தப் பண்டிகை, பத்ரா எனப்படும் நேபாள நாட்காட்டியின்படி, ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. [3]
பல ஆண்டுகளாக, திருவிழாக்கள் சுதுர்பாஷ்சிம் பகுதி மக்களுக்கு அடையாளம் காணும் காரணியாக மாறியுள்ளது. நேபாளத்தின் சுதுர்பாஷ்சிம் மற்றும் கர்னாலி மாகாணங்களின் காஸ் சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. [4] பண்டிகை கொண்டாட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திருவிழாவின் இறுதி நாளில் மக்கள் துண்டிகேல் மைதானத்தில் கூடி தேவதா நடனம் ஆடுகின்றனர். [5] இந்தியாவில், உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவின் பித்தோராகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த விழாவின் பெயர் கௌரி தேவியின் உள்ளூர் பெயரிலிருந்து பெறப்பட்டது. கௌரி இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானின் மனைவி ஆவார். புராணத்தின்படி, கௌரி இமயமலையின் அரசன் இமவானின் மகள் என்பதால், மேற்கு நேபாளம் மற்றும் உத்தரகண்ட் பகுதி மக்கள், இந்த தெய்வத்தை தங்கள் உறவினராக கருதுகின்றனர்.
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில், திருவிழா சாட்டன்-அத்தான் அல்லது சது-அத்து என்று அழைக்கப்படுகிறது, இது ஏழாவது மற்றும் எட்டாவது என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய கொண்டாட்டம் திருவிழாவின் ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் நடைபெறுவதால் இவ்விழா அவ்வாறு அழைக்கப்படுகிறது. [6]
தோற்றம்
[தொகு]கௌராவின் தோற்றம் குறித்து பல கதைகள் உள்ளன, ஆனால் முக்கியமாக இந்த நாளில், பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சிவபெருமானின் மனைவியான கௌரி தேவியை வணங்குகிறார்கள். [7] சிவன் ( மற்றும் பார்வதி ஆகியோரின் அன்பான பந்தமே இவ்விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம். கௌரி தேவி சிவபெருமானை தன் கணவனாகப் பெறுவதற்காக கடுமையான தவம் மேற்கொண்டாள். இத்திருவிழாவில் அம்மனின் தவம் போற்றப்படுகிறது.
மற்றொரு கதையின்படி, பண்டைய ஹெஹேயா வம்ச மன்னர்களில் ஒருவரான சஹஸ்த்ரர்ஜுனன், பிருகுவன்சி பிராமணர்களைக் கொன்றார், அவர் தனது செல்வத்தைத் திரும்பக் கோரினார். அந்த பிராமணர்களின் துக்கமடைந்த விதவை மனைவிகள் தங்கள் நேர்மையைக் காக்க கௌரி தேவியிடம் விரதம் இருந்து பிரார்த்தனை செய்தனர். ஒரு பிராமணப் பெண், மன்னன் சஹஸ்த்ரார்ஜுனனைக் குருடாக்கச் சென்ற ஒரு திறமையான மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது அரசன் தன் குற்றத்திற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டான். கௌரி தேவியின் கருணை மற்றும் சர்வ வல்லமையைப் போற்றும் வகையில், இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. [8]
கௌரா பர்வா என்பது வருடத்தின் பிற்பகுதியில் வருகின்ற திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ ஜோதிடக் குழுவால் திருவிழாவின் தேதி கணக்கிடப்படுகிறது. திருவிழா பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும், நேபாளி நாட்காட்டியின்படி ஷ்ராவன் அல்லது பத்ரா மாதத்திலும் வரும்.
இந்தியா
[தொகு]இந்தியாவில், புரட்டாசி மாச சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் இருந்து புரட்டாசி மாச சுக்ல பக்ஷ அஷ்டமி திதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. [9]
சான்றுகள்
[தொகு]- ↑ Sansar, Nepali; Bureau, Nepali Sansar (2020-08-26). "Nepal Celebrates Gaura Parva Festival with Great Fervor!". Nepali Sansar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "अनोखा है उत्तराखंड का लोकपर्व सातों- आठों, जानें क्या हैं मान्यताएं, क्यों मनाते हैं लोग". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.
- ↑ "सुदूरपश्चिममा सुरु भयो गौरा पर्व". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "सुदूरपश्चिमकाे माैलिक पर्व "गाैरा" एक चिनारी - Lekhapadhi.com हाम्राे संस्कृति हाम्राे पहिचान - गाैरा विशेष : Lekhapadhi.com". lekhapadhi.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-08-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.
- ↑ "टुंडिखेलमा गौरा, गौरामा देउडा". Lokpath (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.
- ↑ "उत्तराखंड- देवभूमि में सातों- आठों (गौरा- महेश) पर्व की धूम, जानिए महत्व". Khabar Pahad (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-08-21.
- ↑ Gaura Parva festival celebrated in Nepal Xinhua, September 2, 2014
- ↑ Setopati, नारायण महर्जन. "काठमाडौमा मनाइयो गौरा पर्व". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ UK, Samachar (2021-08-29). "सृष्टि के संतुलन को बनाए रखने का पर्व है सातों- आठों". Samachar UK (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.