உள்ளடக்கத்துக்குச் செல்

கௌராங்கு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌராங்கு ஆறு (Gaurang) பூட்டான் நாட்டில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி இந்தியாவிற்குள் பாய்கின்ற ஓர் ஆறாகும். கௌரங்கு ஆறு, குராங்கு ஆறு என்ற பெயர்களாலும் இந்த ஆறு அறியப்படுகிறது.[1][2] கௌராங்கு ஆறு 98 கிலோமீட்டர் (61 மைல்) நீளமுள்ள ஓர் ஆறாகும். முதலில் வடகிழக்கு இந்தியாவிலுள்ள சிராங்கு மாவட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைகிறது. அங்கு இது சுவர்மங்கா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பின்னர் மேற்கு நோக்கி அசாம் மாநிலத்தின் கோக்ரச்சார் மாவட்டத்தில் பாய்கிறது. பின்னர் தெற்கே துப்ரி மாவட்டத்தில் திரும்பி, பிரம்மபுத்திரா நதியின் வலது கரையில் முடிகிறது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kokrajhar district". www.assaminfo.com. Retrieved 2020-12-05.
  2. "Three Students drown again in Kokrajhar's Gaurang River" (in அமெரிக்க ஆங்கிலம்). 2 October 2020. Retrieved 2020-12-05.
  3. Borah, Pranjal. "Principal Rivers in Assam". Assam Online Portal. Archived from the original on 2014-07-31. Retrieved 2014-02-14.
  4. "Gwrang — river of life and death". Hindustan Times (in ஆங்கிலம்). 2012-08-01. Retrieved 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌராங்கு_ஆறு&oldid=4242033" இலிருந்து மீள்விக்கப்பட்டது