கௌரவ் ஆனந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரவ் ஆனந்து
Gaurav Anand
தாய்மொழியில் பெயர்ଗୌରବ ଆନନ୍ଦ
பிறப்புபுவனேசுவரம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பக்சி சகபந்து பித்யாதர் கல்லூரி, புவனேசுவரம்
இசை வாழ்க்கை
தொழில்(கள்)
இசைக்கருவி(கள்)குரலிசை, கித்தார், ஆர்மோனியம், கின்னரப்பெட்டி
இசைத்துறையில்2017–முதல்

கௌரவ் ஆனந்து (Gaurav Anand) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகர் ஆவார். இசையமைப்பாளர் மற்றும் இசை ஏற்பாட்டாளராகவும் இவர் செயல்படுகிறார். முதன்மையாக ஒடியா திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். [1] [2] [3] பல திரைப்படம் அல்லாத ஒடியா பாடல்களை இசையமைத்து பாடியுள்ளார். [4] [5] [6] [7] [8] பாடல்களில் காணப்படும் தூய ஒடியா சொற்கள் இவரது ஆத்மார்த்தமான இசையமைப்பை தனித்துவமாக்குகிறது.

வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

கௌரவ் ஆனந்து ஓர் உணர்ச்சிகரமான பாடகர் மற்றும் இசைக்கலைஞராகக் கருதப்படுகிறார். புவனேசுவர் நகரில், பிறந்து வளர்ந்தார். குழந்தை பருவத்திலிருந்தே உலக அளவிலான இசையுடன் தொடர்பில் இருந்தார். புகழ்பெற்ற பாரம்பரிய குரு சிறீ தாமோதர் ஓதாவின் நேரடி மாணவரான சிறீ சுபாசு சந்திர தாலிடம் இந்துசுதானி பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். பாடுவதற்கும் இசையமைப்பதற்குமான திறமையால், 2017 ஆம் ஆண்டில் ஓர் இசைத் தொகுப்பை வெளியிட்டார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அலைவரிசைகளுக்கும் இசையமைத்து பாடியுள்ளார்.

கௌரவ் ஆனந்து வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான இசையமைப்பிற்காகவும், பாடல்களுக்கு தனித்துவமான பாடல் வரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவும் நன்கு அறியப்படுகிறார். இவரது படைப்புகளில், பிரேமம் (2022), ஆய் கிருட்டிணா! (2022) தமன் (2022) போன்ற திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பங்காற்றியுள்ளார். கிட்டத்தட்ட 20+ இசைத் தொகுப்புகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றிற்கு குரல் கொடுத்துள்ளார்.

ஒரிய திரைத்துறையின் முன்னணி நடிகரும் பாடகருமான பாபுசான் மொகந்தி அவரது பிரேமம் மற்றும் தமன் படங்களுக்கு இசையமைக்க இவருக்கு வாய்ப்பளித்தார். இரண்டு படங்களின் இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பட்டியல்[தொகு]

இசை அமைப்பாளராக[தொகு]

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம்
2022 பிரேமம்
2022 அய் கிருட்டிணா
2022 தமன்
2023 கசபதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "After 'Daman', Odia film industry gears up for another film titled 'Ae Akasha Tale'". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-18. பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  2. "Odia Music Video 'Syaahi' A Lyrical Fusion Of Conflicting Emotions". odishabytes (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  3. "Gaurav Anand - Movies, Biography, News, Age & Photos". BookMyShow (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  4. "Gaurav Anand on Apple Music". Apple Music (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  5. "Gaurav Anand". Spotify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  6. "Gaurav Anand - Top Songs - Listen on JioSaavn". JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  7. "Gaurav Anand Songs - Play & Download Hits & All MP3 Songs!". Wynk Music (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  8. "Gaurav Anand Songs: Listen Gaurav Anand Hit Songs on Gaana.com". Gaana.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.

புற இணைப்புகள்[தொகு]

  • Gaurav Anand at IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவ்_ஆனந்து&oldid=3606365" இலிருந்து மீள்விக்கப்பட்டது