கௌது சிரிசா
கௌது சிரிசா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | சீதிரி அப்பாலராஜீ |
| தொகுதி | பலாசா சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1980 (அகவை 45–46) |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
கௌது சிரீசா (Gouthu Sireesha)(பிறப்பு 1980) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சிறீகாகுளம் மாவட்டத்தின் பலாசா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்.[1][2]
இளமையும் கல்வியும்
[தொகு]சிரீசா பலாசாவில் பிறந்தார். இவர் யார்லகட்டா வெங்கண்ண சவுத்ரியை மணந்தார். 2015-ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட என். பி. எம். சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு பைடா கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] இவர் சிறீ சயனச் சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் அமைச்சர் கௌது சியாம் சுந்தர் சிவாஜி[3] இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கௌது லட்சண்ணாவின் பேத்திக்கு மகளாகப் பிறந்தார்.[4][5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சிரீசா 2019-ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அப்பலராஜு சீதிரியிடம் தோல்வியடைந்தார். ஆனால் , 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில், இவரது தந்தை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பலாசா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் அப்பலராஜு சீதிரியை 40,350-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Palasa Assembly Election Results 2024: Palasa Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Palasa Constituency Election Results 2024: Palasa Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ 3.0 3.1 "Gouthu Sireesha(TDP):Constituency- PALASA(SRIKAKULAM) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
- ↑ Pativada, Sreenu Babu (2024-04-13). "2 women in fray to take forward family legacy in North Andhra politics". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-07.
- ↑ Rao, Chowdari Lakshmana (2024-06-07). "Srikakulam: Alliance wave gives chance to novices". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-07.
- ↑ "Palasa Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.