கௌதம நீலாம்பரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌதம நீலாம்பரன்
பிறப்புக. கைலாசநாதன்
சூன் 14, 1948
இறப்புசெப்டம்பர் 14, 2015(2015-09-14) (அகவை 67)
சென்னை, இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
காலம்1970-2015
வகைவரலாற்றுப் புதினம், கட்டுரைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஈழவேந்தன் சங்கிலி

கௌதம நீலாம்பரன் (Gauthama Neelambaran) (இயற்பெயர்: க. கைலாசநாதன்; 14 சூன் 1948 – 14 செப்டம்பர் 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புதின எழுத்தாளர் ஆவார்.

இவரது முதல் சிறுகதை, புத்தனின் புன்னகை, சுதேச மித்திரனில் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1] இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என பல படைப்புகளை ஆக்கியுள்ளார்.

தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம், குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் இவர் பணியாற்றியுள்ளார். இந்த இதழ்களில் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் வருகையை பெரிதும் ஊக்குவித்தார். 'முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் புத்தர் பிரான் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.[2]

இவரது வரலாற்று புதினங்களான சேது பந்தனம், மன்னன் மாடத்து நிலவு, ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், விஜய நந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், சோழவேங்கை, கலிங்கமோகினி, வேங்கை விஜயம், வீரத்தளபதி மருதநாயகம், மோகினிக் கோட்டை, கோச்சடையன், ரணதீரன், ரஜபுதன இளவரசி, சுதந்திர வேங்கை ( பூலித்தேவன் வரலாறு ) ஆகியவை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

எழுதிய நூல்கள்[தொகு]

 • பல்லவன் தந்த அரியணை
 • அதியமான் கோட்டை
 • ஈழவேந்தன் சங்கிலி
 • உதய பூமி
 • கலிங்க மோகினி
 • காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள்
 • சாணக்கியரின் காதல்
 • சித்திரப் புன்னகை
 • சிம்மக்கோட்டை
 • சேதுபந்தனம்
 • சேரன் தந்த பரிசு
 • சோழ வேங்கை
 • நிலா முற்றம்
 • பல்லவன் தந்த அரியணை
 • பாண்டியன் உலா
 • புலிப் பாண்டியன்
 • பூமரப் பாவை
 • மந்திர யுத்தம்
 • மருதநாயகம்
 • மன்னன் மாடத்து நிலவு
 • மாசிடோனிய மாவீரன்
 • மோகினிக் கோட்டை - பல்லவ மோகினி
 • ராஜகங்கனம்
 • ராஜபீடம்
 • ராஜபுதன இளவரசி
 • ராஜபொக்கிஷம்
 • விஜய நந்தினி
 • வெற்றி மகுடம்
 • வேங்கை விஜயம்

விருதுகள்[தொகு]

இவருக்கு வழங்கப்பட்ட சில விருதுகள்[3]:

விருதுகள் வழங்கிய அமைப்பு
பாரதி விருது அமுத சுரபி ( ஸ்ரீராம் டிரஸ்ட் ) - சுஜாதா பிலிம்ஸ் இணந்து
"பேராசிரியர் கல்கி இலக்கிய விருது” அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்
"தமிழ் வாகைச் செம்மல்” சேலம் தமிழ்ச் சங்கம்
மன்னார்குடி செங்கமலர்த் தாயார் கல்வி அறக்கட்டளை விருது மன்னார்குடி செங்கமலர்த் தாயார் கல்வி அறக்கட்டளை
தமிழ்மாமணி விருது கவிதை உறவு
சக்தி கிருஷ்ணசாமி விருது சைதை மகாத்மா நூலகம்
'இலக்கியப் பேரொளி” விருது கவிஞர் பொன்னடியான்
'கதைக்கலைச் செம்மல் விருது" திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம்

மறைவு[தொகு]

கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015இல் மாரடைப்பால் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் காலமானார்!". விகடன் இணையதளம். 14 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 2. "கௌதம நீலாம்பரனின் வலைப்பதிவு". பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. "விருதுகளை குவித்த எழுத்தாளர் கவுதம நீலாம்பரன்". தினமலர். 14 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம_நீலாம்பரன்&oldid=3514589" இலிருந்து மீள்விக்கப்பட்டது