கௌதம சித்தார்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌதம சித்தார்தன் (Gowthama Siddarthan) நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கட்டுரை, கவிதை, சினிமா விமர்சனம், இலக்கிய விமர்சனம் என தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு உன்னதம்[1] என்ற தீவிர இலக்கிய நடதியுள்ள நிலையில், தற்போது தமிழி என்ற பெயரில் நாளிதழ் வடிவிலான இலக்கிய இதழைத் தொடங்கியுள்ளார். தனது தமிழி இதழை பழங்குடியினர், விளிம்புநிலை மக்களைக் கொண்டு வெளியிடச் செய்து வருகிறார். இப்படி விளிம்புநிலை மக்களை இலக்கிய இதழை வெளியிடச் செய்வது தமிழ் இலக்கிய உலகில் முற்றிலும் ஒரு புதிய நிகழ்வாகும்.[2]

கௌதம சித்தார்த்தன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவராவார். தமிழ்ச் சிறுகதைகள் குறித்துக் கறாரான பார்வை உடையவரான இவர் ‘பொம்மக்கா’, ‘பச்சைப் பறவை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். பின்நவீனத்துவ பாணியைச் சிறுகதை என்னும் புனைவுக்குள் கொண்டுவந்த செயற்பாட்டில் இவருக்கும் பங்குண்டு. கொங்கு வட்டாரத்தில் கிராமியப் பகுதியின் நம்பிக்கை, சடங்குகள் குறித்த நாட்டார் வாழ்வியலையும் கதைகளாக்குகிறார். கொங்கு வட்டாரத்தை கதைக்களமாகவும், கொங்கு வட்டாரச் சொற்களை எழுத்துக்களாகவும் பயன்படுத்துவது இவரது சிறப்பாகும்.

எழுதிய நூல்கள்[3][தொகு]

  1. ஆயுத வியாபாரத்தின் அரசியல்[4]
  2. உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்
  3. கருத்து சுதந்திரத்தின் அரசியல்
  4. சாதி அரசியல் அதிகாரம்
  5. பொம்மக்கா
  6. மூன்றாவது சிருஷ்டி[5]
  7. யாராக இருந்து எழுதுவது[6]
  8. சங்ககால சாதி அரசியல்
  9. பச்சைப் பறவை[7]
  10. முருகன் - விநாயகன்[8]
  11. தமிழ் சினிமாவின் மயக்கம்[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "லத்தீன் அமெரிக்காவுக்கும் மாய யதார்த்தத்துக்குமானபொருத்தம் இயல்பானது! இஸபெல் அயெந்தே பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  2. "'நாதியற்றவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறேன்' – எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  3. "கௌதம சித்தார்த்தன்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2. பார்த்த நாள்: 26 December 2022. 
  4. "வாசகர் திருவிழா 2015: அதிகம் விற்பனையான புத்தகங்கள்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  5. "வாசகர் திருவிழா 2015: அதிகம் விற்பனையான புத்தகங்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/28547-2015.html. பார்த்த நாள்: 26 December 2022. 
  6. "சங்க இலக்கியங்கள் இயற்கை சுரங்கம்". Dinamalar. 2016-07-05. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  7. "பச்சைப் பறவை /கௌதம சித்தார்த்தன். Paccaip par̲avai /Kautama Cittārttan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  8. "முருகன் விநாயகன் - மூன்றாம் உலக அரசியல்". Goodreads. https://www.goodreads.com/book/show/34834220--. பார்த்த நாள்: 26 December 2022. 
  9. "தமிழ் சினிமாவின் மயக்கம் /கௌதம சித்தார்த்தன். Tamil̲ cin̲imāvin̲ mayakkam /Kautama Cittārttan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம_சித்தார்தன்&oldid=3626204" இலிருந்து மீள்விக்கப்பட்டது