கௌசல்யா ஹார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கௌசல்யா ஹார்ட் யுசி பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காகவும், பல தமிழ் பாடநூல்களை எழுதியுள்ளமைக்காகவும் நன்கு அறியப்படுகிறார்[1].

வாழ்க்கை[தொகு]

கௌசல்யா ஹார்ட் தமிழ்நாட்டின் மதுரையில் 1930-ல் பிறந்தார். தன்னுடைய முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1962-ல் முடித்த இவர் அயல் நாட்டைச் சேர்ந்த மற்றொரு தமிழ் அறிஞரான ஜார்ஜ் எல். ஹார்ட்(George L. Hart) என்பவரை மணம்புரிந்தார்..

பணி[தொகு]

இவர் எழுதிய 'தொடங்குனர்களுக்கான தமிழ்' எனப் பொருள்படும் 'Tamil for Beginners' என்கிற பாடபுத்தகம் பல பல்கலைக் கழகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவர் பல தமிழ் நாடகங்களையும் இயற்றியுள்ளார். இவர் தமிழ் இலக்கியம், குறிப்பாக தமிழ் இராமாயணம் மற்றும் முற்கால கிறித்தவ இலக்கியக் கூறுகள் ஆகிய தலைப்புகளில் பல ஆய்வுத்தாள்களும் இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dept. of S & SE Asian Studies - UC Berkeley". 2012-03-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்யா_ஹார்ட்&oldid=3326773" இருந்து மீள்விக்கப்பட்டது