கோ. பி. பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. பி. பிள்ளை
பிறப்பு26 பெப்பிரவரி 1864 Edit on Wikidata
திருவனந்தபுரம் Edit on Wikidata
இறப்பு21 மே 1903 Edit on Wikidata (அகவை 39)
படித்த இடங்கள்
பணிபார் அட் லா edit on wikidata

கோவிந்தன் பரமேசுவரன் பிள்ளை என்பவர் பொதுவாக பாரிஸ்டர் ஜி. பி. பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். பள்ளிச்சலின் கோவிந்தன் பரமேசுவரன் பிள்ளை (1864 – 1903) பிப்ரவரி 2, 1864 அன்று திருவனந்தபுரம், பள்ளிப்புரத்தில் நாயர் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் அரிகரன் அய்யர் மற்றும் கார்த்தியாயனி அம்மா ஆவார்.

பிள்ளை, சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு[2] 1898-ல் இலண்டனில் உள்ள மிடில் டெம்பிள் மேற்படிப்பிற்காகச் சென்றார். 1902-ல் திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காகத் திரும்பினார்.[3] . பின்னர் தென்னிந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழான தி மெட்ராஸ் ஸ்டாண்டர்டை நிறுவினார். சென்னையில் தங்கியிருந்த காலத்தில் தி இந்துவில் எழுதி வந்தார். 1891-ல் மலையாளி நினைவகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள ஒரே ஒரு மலையாளி இவர்தான்.[4]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பு[தொகு]

1885-ல் இந்தியத் தேசிய காங்கிரசின் உருவாக்கம் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்த வழிவகுத்தது. கோ. ப. பிள்ளை கேரளாவில் இந்த அமைப்பின் ஆரம்பக்கால தலைவராக இருந்தார். மேலும் இரண்டு முறை பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்டின் ஆசிரியராகவும், திருவிதாங்கூர் மாநிலத்தில் பொது உரிமைகளுக்கான ஆர்வலராகவும் நன்கு அறியப்பட்டவர். ஒரு வலிமையான எழுத்தாளர் மற்றும் பேச்சாளரான, இவர் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பரந்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்க இந்தியப் பிரச்சினையிலும், நிதான இயக்கத்திலும் தனக்குப் பிள்ளை அளித்த உதவியையும் வழிகாட்டுதலையும் ஒப்புக்கொண்டார்.[5][6]

இவர் சென்னையில் தங்கியிருந்த இடம் 'திருவாங்கூர் நினைவு இல்லம்' ('மலையாளி நினைவு இல்லம்' என்றும் அழைக்கப்படுகிறது) என அழைக்கப்படுகிறது.[7]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Page 427 of Nayar Samudayathinte Itihasam (History of the Society of Nairs in Kerala) Published by Sahitya Vedi, Trivandrum, December 1987 accessed at India Office Records
  2. "Setting an old record straight - The Hindu".
  3. Middle Temple Admission Register, vol 2 (London 1949)
  4. Nair, C. Gouridasan (2014-02-25). "Malayali who found a place in Gandhi's heart, biography" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/malayali-who-found-a-place-in-gandhis-heart-biography/article5723418.ece. 
  5. Perunna K. N. Nair, Freedom Movement in Kerala – A Ray of Liberation. Features, Press Information Bureau, Government of India. Retrieved 20 January 2014.
  6. Mohandas K. Gandhi, Poona and Madras in his autobiography, The Story of My Experiments with Truth
  7. Nair, Achuthsankar S. (10 August 2018). "In the footsteps of saints, poets and reformers". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._பி._பிள்ளை&oldid=3610509" இலிருந்து மீள்விக்கப்பட்டது