உள்ளடக்கத்துக்குச் செல்

கோ-ப்வா மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ-ப்வா
கமேங்கி
புகுனிசு
புவியியல்
பரம்பல்:
அருணாச்சல பிரதேசம்
மொழி வகைப்பாடு: சீன-திபெத்திய
 கோ-ப்வா
துணைப்பிரிவு:
சக் (துகம்பி)
லிசு(கிசுபி)
? புரோயிக்
? புகுன்

கோ-ப்வா மொழிகள் (Kho-Bwa languages) என்பது கமெங்கிக் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பேசப்படும் ஒரு சிறிய மொழிக்குடும்பம் அல்லது மொழிக்குடும்பங்களின் இணை ஆகும். கோ-ப்வா என்ற பெயர் முதலில் சாா்சு வான் ட்ரீம் (2001) என்பவரால் முன்மொழியப்பட்டது. இது *கோ ("நீர்") மற்றும் * ப்வா("நெருப்பு") ஆகிய புனரமைக்கப்பட்ட சொற்களை அடிப்படையாகக் கொண்டது. பிளென்ச் (2011) அருணாச்சல பிரதேசத்தின் கமெங் பகுதியிலிருந்து கமெங்கிக் என்ற பெயரைப் பரிந்துரைக்கிறார். மாற்றாக, ஆண்டர்சன் (2014) [1] கோ-ப்வாவை வடகிழக்கு கமெங்கிக் என்று குறிப்பிடுகிறார்.

வான் ட்ரீம் மற்றும் பிளென்ச் இருவரும் செர்டுக்பென் (அல்லது மெய்), லிசுபா (அல்லது கிசபி), சுக் (துகம்பி) மற்றும் சர்தாங் மொழிகளை ஒன்றாக வகைப்படுத்துகின்றனர். இவை ஒரு மொழிக் குழுமத்தை உருவாக்குகின்றன மற்றும் தெளிவாகத் தொடர்புடையவை. சுலுங் (அல்லது புரோய்க்) மற்றும் கோவா (அல்லது புகுன்) மொழிகளின் இணை வான் ட்ரீம் (2001) என்பவரால் இந்தக் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் பிளென்ச் (2024) என்பவரால் தற்காலிகமாக இரண்டாவது குடும்பமாகக் கருதப்படுகிறது.

இந்த மொழிகள் பாரம்பரியமாக இந்திய மொழியியல் ஆய்வு நிறுவனத்தால் திபெத்தோ-பர்மா குழுவில் வைக்கப்பட்டுள்ளன. ஜாக்சன் சன், ஜார்ஜ் வான் ட்ரீம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த பல கையேடுகள் மற்றும் மொழி வகைப்பாட்டு தரவுத்தளங்களும் கோ-ப்வா மொழிகளை திபெத்தோ-பர்மா அல்லது சினோ-திபெத்தியன் என்று குறிப்பிடுகின்றன. இருப்பினும், ரோஜர் பிளென்ச் இந்த மொழிகளின் சினோ-திபெத்திய தோற்றத்தை ஏற்கவில்லை, அதற்குப் பதிலாக ஒரு பிராந்திய விளைவின் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

இதனையும் படிக்க

[தொகு]
  • Ismail Lieberherr and Timotheus Adrianus Bodt. (2017) Sub-grouping Kho-Bwa based on shared core vocabulary. Himalayan Linguistics 16(2). 26–63. Paper (CLDF Dataset on Zenodo எஆசு:10.5281/zenodo.2553234)
  • Binny Abraham, Kara Sako, Elina Kinny, Isapdaile Zeliang (2018). Sociolinguistic Research among Selected Groups in Western Arunachal Pradesh: Highlighting Monpa. SIL Electronic Survey Reports 2018–009. (CLDF Dataset on Zenodo. எஆசு:10.5281/zenodo.3537601)
  • Bodt, T. and J.-M. List (2019). Testing the predictive strength of the comparative method: An ongoing experiment on unattested words in Western Kho-Bwa languages. Papers in Historical Phonology 4.1. 22–44. எஆசு:10.2218/pihph.4.2019.3037 (CLDF Dataset on Zenodo எஆசு:10.5281/zenodo.3537604)
  • Bodt, Timotheus A.; List, Johann-Mattis (2021). "Reflex prediction: A case study of Western Kho-Bwa". Diachronica. doi:10.1075/dia.20009.bod. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anderson, Gregory D.S. 2014. On the classification of the Hruso (Aka) language. Paper presented at the 20th Himalayan Languages Symposium, Nanyang Technological University, Singapore.
  • van Driem, George (2001). Languages of the Himalayas: An Ethnolinguistic Handbook of the Greater Himalayan Region. Brill.
  • Blench, Roger. 2011. (De)classifying Arunachal languages: Reconsidering the evidence
  • Lieberherr, Ismael (2015). "A progress report on the historical phonology and affiliation of Puroik". In Linda Konnerth; Stephen Morey; Priyankoo Sarmah; Amos Teo (eds.). North East Indian Linguistics (NEIL) 7,. Canberra: College of Asia and the Pacific, The Australian National University. pp. 235–286.
  • Lieberherr, Ismael; Bodt, Timotheus Adrianus (2017). "Sub-grouping Kho-Bwa based on shared core vocabulary". Himalayan Linguistics 16 (2). https://escholarship.org/uc/item/4t27h5fg. 
  • Abraham, Binny, Kara Sako, Elina Kinny, Isapdaile Zeliang. 2018. Sociolinguistic Research among Selected Groups in Western Arunachal Pradesh: Highlighting Monpa. SIL Electronic Survey Reports 2018–009.
  • Wu, Mei-Shin; Bodt, Timotheus A.; Tresoldi, Tiago (2022). "Bayesian phylogenetics illuminate shallower relationships among Trans-Himalayan languages in the Tibet-Arunachal area". Linguistics of the Tibeto-Burman Area 45 (2): 171–210. doi:10.1075/ltba.21019.wu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0731-3500. 
  • Bodt, Timotheus A. (2024). Proto-Western Kho-Bwa: Reconstructing a Community's Past through Language. Language and Linguistics Monograph Series. Vol. 67. Taipei: Institute of Linguistics, Academia Sinica. ISBN 978-626-7341-64-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ-ப்வா_மொழிகள்&oldid=4571362" இலிருந்து மீள்விக்கப்பட்டது