கோவை 53 (நெல்)
தோற்றம்
கோ-53 (CO-53) |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
பிகேஎம் (ஆர்) - 3 நொறுங்கன்[1] |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
115 - 120 நாட்கள் |
மகசூல் |
37.18, (குவிண்டால்/எக்டேர்) [2] |
வெளியீடு |
2020[3] |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
மாநிலம் |
தமிழ்நாடு |
நாடு |
![]() |
கோவை 53 (CO 53) என்பது, தமிழ்நாட்டின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நெல் வகையாகும். அண்ணா(R)4 க்கு மாற்று இரகமாக CB 06803, கலப்பின PMK (R) 3 x நொறுங்கன் நெல்லின் வழித்தோன்றலாக, 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.[1]
115 -120 நாட்கள் கால அளவு கொண்ட இந்த நெல் இரகம், முதிர்ச்சி அடைந்த நிலையில் சராசரியாக எக்டேருக்கு 37.18 குவிண்டால் மகசூல் தரக்கூடியதாக கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குறுகிய தடித்த தானியங்களின் கீழ் அதிக தானிய மகசூல் கொண்ட கோ - 53 தமிழ்நாட்டின் வறட்சி பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நேரடி விதைப்பு மானாவாரி அல்லது அரை உலர் நெல் சுற்றுச்சூழல் அமைப்பாக சாகுபடிக்கு ஏற்றது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rice CO 53: A high yielding drought tolerant rice variety for drought prone districts of Tamil Nadu". www.ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-17.