உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 56

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை - 56
CO - 56
வேளாண் பெயர்
CO - 56
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
CO (R) 50 / CB 05501[1]
வகை
கலப்பின நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
6372 கிலோஎக்டேர்[1]
வெளியீடு
2023[2]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கோவை - 56 (CO - 56) என்பது, CO (R) 50 / CB 05501 கலப்பினத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1] சிறந்த தானிய தரமும், மற்றும் பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு நல்ல எதிர்ப்புத் திறன் பெற்றதாக உள்ள நெல் இரகம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பயிரிடப்படும் பிரபலமான மற்றும் அதிக மகசூல் தரும் நெல் இரகமாகும்.[3]பலத்த மழை மற்றும் பலத்த காற்று போன்ற பாதகமான வானிலை நிலைகளைத் தாங்கும் வலுவான மற்றும் உறுதியான தாவர அமைப்பு காரணமாகவும், கோ-56 நெல் வகையை விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இந்த வகையின் தானியங்கள் வெள்ளையாகவும், நீண்ட மற்றும் மெல்லியதாகவும் இருப்பதால், சமைக்க சிறந்ததாக கூறப்படுகிறது. கோ-56 நெல் வகை இந்தியாவில் நிலையான மற்றும் இலாபகரமான நெல் சாகுபடியை ஊக்குவிப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதாக அறியப்படுகிறது.[3]

வெளியீடு

[தொகு]

தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2023 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

மகசூல்

[தொகு]

130 முதல் 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய கோ 56 நெல் வகை, சராசரியாக தானிய மகசூல், ஒரு எக்டேருக்கு 6372 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பா, பின் சம்பா, மற்றும் தாளடி போன்ற மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களில் பயிரிட ஏற்ற நெல் இரகமாக கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Season and Varieties : Rice CO 56". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-20.
  2. 2.0 2.1 "VARIETIES RELEASED". tnau.ac.in (ஆங்கிலம்) -© 2023. Retrieved 2025-06-20.
  3. 3.0 3.1 "Co-56 Paddy Variety Related Detail". agri.bot (ஆங்கிலம்) - © March 2, 2024. Retrieved 2025-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_56&oldid=4295201" இலிருந்து மீள்விக்கப்பட்டது