உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 55

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை - 55
CO 55
வேளாண் பெயர்
CO 55
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ADT 43 x GEB 24[1]
வகை
கலப்பின நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
6057 கிலோஎக்டேர்[2]
வெளியீடு
2022[3]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கோவை - 55 (CO 55) என்பது, ADT 43 / GEB 24 கலப்பினத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1] கோ 55 நெல் வகை, மற்ற அரிசி வகைகளிலிருந்து தனித்துவமான உடல் பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் மெல்லிய மற்றும் நீளமான தோற்றத்தால் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.[4]

வெளியீடு

[தொகு]

தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2022 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

மகசூல்

[தொகு]

115 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய கோ 55 நெல் வகை, சராசரியாக தானிய மகசூல், ஒரு எக்டேருக்கு 6057 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கார், குறுவை, நவரை மற்றும் கோடை போன்றப் பருவங்களில் பயிரிட ஏற்ற நெல் இரகமாக கூறப்படுகிறது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Paddy CO 55". tnauagricart.com (ஆங்கிலம்) - © 2024. Retrieved 2025-06-19.
  2. 2.0 2.1 "Season and Varieties - Rice CO 55". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) -© TNAU 2008 - 2023. Retrieved 2025-06-19.
  3. 3.0 3.1 "TNAU Released New Crop Varieties for 2022 - Page 1/1" (PDF). www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - November 28, 2023. Retrieved 2025-06-19.
  4. "Grain type of co 55 paddy variety". agri.bot (ஆங்கிலம்) - November 28, 2023. Retrieved 2025-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_55&oldid=4295202" இலிருந்து மீள்விக்கப்பட்டது