கோயம்புத்தூர் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோவை மாநகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வார்ப்புரு:கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் பெரும் தொழில் நகரமாக (தென்னிந்தியாவின் மான்செஸ்டர்) இருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பே கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் சுமார் 105.6 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும்.இது தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.

கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

  • பன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.
  • மலைகளின் இராணி என அழைக்கப்படும் உதகமண்டலம் (ஊட்டி)கோவையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சாலைகள் மூலமும் மலைத் தொடர்வண்டியின் மூலமும் கோவையை இணைக்கின்றது.
  • கோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
105.6 ச. கிமீ
மக்கள் தொகை
1991 கணக்கெடுப்பின்படி 8,16,321
மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
மாநகராட்சி வட்டங்கள்
100 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மாநகராட்சி வடிவமைப்பு[தொகு]

மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சி[தொகு]

1871ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013ம் ஆண்டு கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.மேலும் கோவையில் கிடைக்கும் காலநிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்பது 100% உண்மை.

வெளி இணைப்புக்கள்[தொகு]