கோவை கோரா பருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kovai Cora cotton
குறிப்பு sarees manufactured in Coimbatore
வகை handicraft
இடம் Coimbatore, Tamil Nadu
நாடு India
பதிவுசெய்யப்பட்டது 2014-15
பொருள் cotton, silk

கோவை கோரா பருத்தி என்பது இந்தியாவில்,தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட ஒரு புடவை வகை ஆகும்.[1][2]இது 2014-15ஆம் ஆண்டில் ஒரு புவியியல் அடையாளமாக இந்திய அரசால்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3][4]

கோவை கோரா பருத்தியைப் பற்றி[தொகு]

கோவை கோரா பருத்தி புடவை பட்டு மற்றும் பருத்தி சேர்ந்த கலவையாகும்.[5]ஒரு சிறந்த தரமான பருத்தி நூல் கோரா பருத்தியினை உற்பத்தி செய்ய பாரம்பரிய பட்டுடன் கலக்கப்படுகிறது.[6] பிரகாசமான வண்ண எல்லை வடிவமைப்புடைய புடவைகள் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் வடிவமைப்புகளை பெற வண்ண பருத்தி மற்றும் பட்டு நூல்கள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி தறி நெய்யப்படுகிறது.மேலும் எல்லைகள் பின்னர் சேர்க்கப்படுகின்றன.

நெய்தல்[தொகு]

கோரா பருத்தி புடவைகள் பாரம்பரிய கைதறிகள் முலம் நெசவு செய்யப்படுகின்றன.[7] ஒவ்வொரு புடவையும் மூன்று நாட்கள் வரை நெசவு செய்யப்பட்டு, ஒரு புடவை நெய்ய நெசவாளர்களுக்கு 450 ரூபாய் முதல் (அமெரிக்க $ 7.00), 850 ரூபாய் (அமெரிக்க டாலர் 13) வரை வழங்கப்படும். தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய நெசவுக் குடும்பங்களால்  இந்த புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை கோரா பருத்தி புடவைகளின் முக்கிய உற்பத்தி இடமாக உள்ளது. .

விற்பனை[தொகு]

தமிழக அரசு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 82 கூட்டுறவு சங்கங்களுக்கு கோவை கோரா பருத்தி ஆடை உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளனர். கோரா பருத்தி புடவைகளின் விலை ரூ 800 (US $ 12) முதல் ரூ1,200 (US $ 19) வரை உள்ளது.கோரா பருத்தி புடவைகளின் விற்பனை கடந்த மூன்று தசாப்தங்களாக பெண்களின் விருப்பத்தேர்விற்க்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மென்மையான பட்டு நிற புடவைகள் பார்ப்பதற்க்கு பிரமிக்கத்தக்கதாகவும் மற்றும் பெண்மேலாடை வண்ணமயமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மென்மையான பட்டு நிறச்சேலைகளை நெசவு செய்வதற்கான குறைந்த தேவைகளும் மற்றும் அதிக ஊதியங்களும் ,நெசவாளர்கள் பட்டு புடவைகளை நெசவு செய்வதற்கு வழிவகுத்தன. ஜி.ஐ. குறியீட்டால்  2014-15 ஆம் ஆண்டில் 15% விற்பனை அதிகரித்தது. தமிழ்நாடு அரசு, அரசால் நிர்வகிக்கப்படும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம்  புடவைகளை விற்பனை செய்கிறது.[8]

போட்டி[தொகு]

பாரம்பரிய கைத்தறி மூலம் நெய்யப்படும் கோரா பருத்தி  புடவைகளுக்கும்,விசைத்தறி மூலம் நெய்யப்படும் மலிவான பருத்தி புடவைகளுக்கும் போட்டி உள்ளது.[9] விசைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 400 முதல் 600 வரையும்,கைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 900 க்கு இடையிலும்,ஒரு புடவையின் விலை 1200 வரையும் உள்ளது. உற்பத்தியை மானியமாக வழங்குவதற்காக தமிழக அரசிடம்  இருந்து நெசவாளர்கள் அடிக்கடி உதவி கேட்டுள்ளனர். .

புவியியல் சார்ந்த குறியீடு[தொகு]

2014 ஆம் ஆண்டில் கோவா கோரா பருத்தி புடவைகளுக்கான புவியியல் குறியீட்டிற்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்தது.[10] 2014-15ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக  இந்தியஅரசால், கோவை கோரா பருத்தி ஆடை புவியியல் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டது. .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_கோரா_பருத்தி&oldid=2374795" இருந்து மீள்விக்கப்பட்டது