உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை ஆர் எச் - 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை ஆர் எச் - 3
CORH-3
பேரினம்
புல்
இனம்
நெல்
கலப்பினம்
சிஎம்எஸ்-2-ஏ x சிபி-87-ஆர்
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
2006
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

கோவை கலப்பின நெல் - 3 (CORH 3) என்பது; வீரியம் மிகுந்த புதிய ஒட்டு இரக நெல் வகையாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செல்கூழ் மரபணு ஆண் மலட்டு வரிசை எனப்படும் "சி எம் எஸ் 2 ஏ" (TNAU CMS 2A) என்ற நெல் இரகத்தையும், சிபி 87ஆர் (CB 87R) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்டுச் சேர்த்துக் கிடைக்கப்பெறும் நெல் வகையான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய குறுகியகால நெல் வகையாகும்.[1] ஒரு எக்டேருக்கு சுமார் 6000 கிலோ வரையில் மகசூலை ஈட்டக்கூடிய இந்த நெல் இரகம், நடுத்தரத் தானிய அமைப்புடன்கூடிய வெண்ணிற அரிசியை கொண்டதாகும்.[2]

பருவக்காலம்

[தொகு]

குறுகியகால நெற்பயிரான கோ ஆர் எச் 3, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சூன் - யூலையில் தொடங்கும் குறுவைப் பருவத்திலும், மற்றும் திசம்பர் - சனவரியில் தொடங்கும் நவரைப் பருவத்திலும், மேலும் திசம்பர் - சனவரியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நவரைப் பருவத்தில் மட்டும் பயிரிட ஏற்றதாக கூறப்டுகிறது.[3]

பண்புகள்

[தொகு]

உயர்ரக விளைச்சல் தரும் சிறப்புடைய இந்நெல் இரகம், நடுத்தரச் சன்னாமான அரிசியை உடையது. மேலும், சோற்றுக்கு ஏற்றப் பண்புகொண்ட இது, நெடுநாள் சேமிக்கும் திறனுடையது.[2]

திறன்கள்

[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2006 இல் வெளியிடப்பட்ட, ஒரே நேரத்தில் ஒத்துப் பூக்கும் தன்மையைப் பெற்ற இதன் நெற்பயிர்கள், குலை நோய் எனும் எரிபந்த நோய், துங்குரோ நச்சுயிரி (Tungro Virus), புகையான் பூச்சி (Fulgoridae), மற்றும் "பச்சை தத்துப் பூச்சிப்" போன்றவைகளை எதிர்க்கும் திறன் படைத்தாக கூறப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. ↑ "CORH 3 - A Short Duration Non aromatic rice hybrid". researchgate.net (ஆங்கிலம்) - 2008-2017. Retrieved 2017-03-12.
  2. 1 2 3 "Paddy Varieties of Tamil Nadu - Ruling Varieties - Hybrids". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. Retrieved 2017-03-13.
  3. ↑ "Rice Seasons of Tamil Nadu - Season and Vaieriets (Please Click, each variety for more details under Cauvery Delta Zone)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2008-2025. Retrieved 2026-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_ஆர்_எச்_-_3&oldid=4446228" இலிருந்து மீள்விக்கப்பட்டது