கோவைக்கீரை - தொண்டைக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோவைக்கீரை கொடி இனத்தைச் சேர்ந்தது. தோட்ட வேலிகளிலும் மரங்களிலும் படர்ந்து வளரக்கூடியது.

வகைகள்[தொகு]

  • கொல்லங்கோவை
  • ராமக் கோவை
  • அப்பைக் கோவை

கொல்லங்கோவை[தொகு]

சமைத்துச் சாப்பிடக்கூடியது. இந்தக் கொல்லங்கோவைக் கீரை பச்சை பசேலென்று வளரும். அடி தல் நுனிவரை ஒரே பச்சை நிறம். காயின் நிறம் கூட பச்சை நிறம். இலை இலேசாக இருக்கும். கொல்லாங்கோவைக் கீரையை அரிசி கழுவிய தூய்மையான நீரிலிட்டு பருப்புடன் கூட்டு வைத்து உண்ணலாம். கோவைக்காய் சாம்பார் நல்ல சுவையாக இருக்கும். பொறியல் செய்தும் சாப்பிடலாம். ஆந்திர மக்கள் ‘தொண்டங்காய்’ என்ற அழைப்பார்கள்.

ராமக்கோவை[தொகு]

இலைகள் நல்ல தடிமனாக, கனமாக இருக்கும். கீரைக் கொடியிலும் அதன் காயிலும் வெளிர் நிற வரிக்கோடுகள் காணப்படும். இக்கீரை கசக்கும். இதன் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து துணியைக் கொண்டு கலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை நீராகாரத்தோடு இரண்டு சிட்டிகை சாப்பிட்டு வர சொறி, சிரங்கு, வியர்குரு இதற்கு சிறந்த மருந்து.

அப்பைக்கோவை[தொகு]

இதன் நிறம் கரும்பச்சை. இலை கனமானது. இதன் இலையை வதக்கி, துவையல் அரைத்துப் பத்திய உணவாகப் பயன்படுத்தவர்.