கோவூர், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவூர் (Kovur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் சென்னை பெருநகரப் பகுதியின் புறநகர்ப் பகுதியாகும். இது போரூர்- குன்றத்தூர் சாலையில் போரூர் சென்னையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 44 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோவூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°00′39″N 80°07′04″E / 13.010800°N 80.117700°E / 13.010800; 80.117700 ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவூரில் 5557 ஆண்கள் மற்றும் 5404 பெண்கள் என 10961 பேர் உள்ளனர். கோவூரின் பாலின விகிதம் 972 ஆகவும், எழுத்தறிவு விகிதம் 87.3 ஆகவும் இருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kovur Population, Caste Data Kancheepuram Tamil Nadu - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவூர்,_சென்னை&oldid=3731976" இலிருந்து மீள்விக்கப்பட்டது