கோவிந்த்ராவ் தெம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த்ராவ் தெம்பே
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)ஆர்மோனியக் கலைஞர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்

கோவிந்த்ராவ் தெம்பே (Govindrao Tembe) (5 சூன் 1881 - 9 அக்டோபர் 1955) என பிரபலமாக அறியப்பட்ட கோவிந்த சதாசிவ தெம்பே ஒரு ஆர்மோனிய இசைக் கலைஞரும், மேடை நடிகரும், இசையமைப்பாளருமாவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

இவர் மகாராட்டிராவின் கோலாப்பூரில் வளர்ந்தார். மேலும், வாழ்க்கையின் ஆரம்பத்தில் இசையுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் பெரும்பாலும் ஆர்மோனியத்தை சுயமாகக் கற்றுக் கொண்டார். இந்துஸ்தானி இசையில் தனது ஆரம்ப முயற்சிகளுக்கு தேவால் சங்கம் இவருக்கு உதவியது. [1]

இவர் தனது கலையை பாஸ்கர்புவா பக்காலே [2] என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டார். ஜெய்ப்பூர் கரானாவின் (பாடும் பாணி) அல்லாடியா கானிடமிருந்து இவர் நேரடி வழிகாட்டுதலைப் பெறவில்லை என்றாலும், தெம்பே அவரை தனது குருவாகக் கருதினார்

தொழில்[தொகு]

இவர் பண்டிட் பாஸ்கர்புவா பக்காலேயுடன் இசைக்கச்சேரிகளுக்குச் சென்றார். மேலும் பெரும்பாலும் தனித்தும் நிகழ்த்துவார். ஆனால் பின்னர் இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஆர்மோனியத்தை கைவிட்டார்.

இவர் 1910 இல் மானப்மேன் என்ற நாடகத்திற்கும், முதல் மராத்தித் திரைப்படமான அயோத்தியேசா ராஜாவுக்கும் (1932) இசை அமைத்தார். இந்த இரண்டு தயாரிப்புகளிலும் இவர் நடித்துமிருந்தார்.

இவர் மைசூரின் இளவரசரனான காந்தீரவ நரசிம்மராச உடையாரின் தனிப்பட்ட நண்பராக இருந்தார். இளவரசர் 1939 இல் ஐரோப்பாவுக்குச் சென்றபோது இவரது இசைக்குழுவும் அவருடன் சென்றது. இந்த பயணத்தின் போது திருத்தந்தை முன்னிலையிலும், பிற இடங்களில் குழு இவரது இசைக்கு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது. உலகப் போர் மூண்டதால், இவர்கள் நீண்ட காலம் இலண்டனில் தங்கியிருந்து இறுதியில் சனவரி 1940 இல் திரும்பினர். ஆனால் நரசிம்மராச உடையார் 1940 மார்ச் 11 ஆம் தேதி மும்பையில் இறந்தவுடன் தெம்பே தனது புரவலரை இழந்தார்.

1913 இல் உருவாக்கப்பட்ட கந்தர்வ நாடக மண்டலத்தின் பகுதி உரிமையாளராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது சொந்த நிறுவனமான சிவ்ராஜ் நடக் மண்டலி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் நாடகங்களையும் அவற்றில் பதங்களையும் (பாடல்கள்) எழுதினார்.

மேலும் படிக்க[தொகு]

  • "Between Two Tanpuras" by Vamanrao H Deshpande ISBN 0-86132-226-6
  • Book by Vasant Shantaram Desai 'Years of Glory', The Marathi Theatre: 1843-1960 (Bombay, 1961)
  • In Marathi: 'सांस्कृतिक महाराष्ट्राचे शिल्पकार : गोविंदराव टेंबे', 2006 लेखक: डॉ. सौ. चारुशीला दिवेकर ("Sanskritik Maharashtrache Shilpkar : Govindrao Tembe", 2006 by Charusheela Divekar)

குறிப்புகள்[தொகு]

  1. "माझा संगीत व्यासंग" (My Study of Music) 1939
  2. Book in Marathi by V H Deshpande "आलापिनी" (Alapini) 1979

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்ராவ்_தெம்பே&oldid=3090048" இலிருந்து மீள்விக்கப்பட்டது