கோவிந்தராயன்-I

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவிந்தராயன்-I என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டி வம்சத்தின் ஐந்தாம் அரசராவார்.[1]

ஸ்கந்தபுரம்[தொகு]

கதையின்படி இவரும் தன் தந்தையைப் போல் கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், தந்தையைப் போலல்லாமல் பகை அரசர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் என அறியமுடிகிறது.[2]

நிலக்கொடை[தொகு]

இராமச்சந்திரன் செட்டியாரின் கருத்துப்படி இவர் சாலிவாகன வருடம் 4 சுபானு, வைகாசி, பௌர்ணமியில் அரிஷ்டணன் என்ற ஜைன மத அர்ச்சகருக்கு நிலக்கொடை வயங்கியதாகவும், இந்த நிலங்கள் தற்கால மைசூருக்கு அருகில் அல்லது கொள்ளேகாலம் வட்டத்தில் குலசதம், பொம்மகொம்மன் போன்ற ஊர்களாக இருக்கலாம் எனவும், கண்டகம் என்பது அன்றைய தானிய அளவை குறிக்கும் "சொல்" எனவும், அறியமுடிகிறது. இக்காலத்தில் பிரஞாபனாசாரி, பஞ்சநந்தி, சொக்கப்பன், ஜெயதேவன் முதலான ஜைனர்கள் இருந்தனர் எனகிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[2]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. 2.0 2.1 கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004- பிழை காட்டு: Invalid <ref> tag; name "two" defined multiple times with different content

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தராயன்-I&oldid=2388497" இருந்து மீள்விக்கப்பட்டது