கோவிந்தச்சந்திரன் (சந்திர வம்சம்)
Appearance
கோவிந்தச்சந்திரன் | |
---|---|
ஆட்சிக்காலம் | 1020 – 1045 |
முன்னையவர் | இலதாகசந்திரன் |
மரபு | சந்திர வம்சம் |
அரசமரபு | சந்திர வம்சம் |
தந்தை | இலதாகசந்திரன் |
தாய் | சௌபாக்யதேவி[1] |
மதம் | பௌத்தம்[1] |
கோவிந்தச்சந்திரன் (Govindachandra) (ஆட்சிக் காலம் பொ.ச. 1020 – 1045) [1] கிழக்கு வங்காளத்தில் ஆட்சியிலிருந்த சந்திர வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளனான் ஆவான்.
வரலாறு
[தொகு]திருமலை கல்வெட்டின் படி, இவனது ஆட்சியின் போது, – பொ.ச.1024க்கு இடையில் சோழ மன்னன் [[இராசேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால் பெரும் படையெடுப்பை எதிர்கொண்டான். கல்வெட்டில் இவன் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோவிந்தச்சந்திரன் என்று அடையாளம் காணப்படுகின்றான்.
கிபி 1049 இன் தொடக்கத்தில், கலாச்சூரி மன்னர் கர்ணதேவனும் (1042-1072 வரை ஆட்சி செய்தவன்) கோவிந்தச்சந்திரன் மீது தாக்குதலைத் தொடங்கினான் (இது சந்திர வம்சத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம்). ஆட்சியில் சோர்வுற்று அரியணையைத் துறந்ததாக வங்காள நாட்டுப்புற பாடல்கள் கூறுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Alam, Aksadul (2012). "Govindachandra". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. pp. 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
- Chowdhury, Abdul Momin (1967). Dynastic History of Bengal. Dacca: The Asiatic Society of Pakistan.