கோவா பல் மருத்துவக் கல்லூரி
![]() கோவா பல்மருத்துவக் கல்லூரி இலட்சினை | |
குறிக்கோளுரை | சிறந்த சேவையினை வழங்கு |
---|---|
உருவாக்கம் | சூன் 1980 |
சார்பு | கோவா பல்கலைக்கழகம் |
துறைத்தலைவர் | மருத்துவர் ஐடா டி நோரோன்ஹா டி அடைடே |
இணையதளம் | https://gdch.goa.gov.in |
கோவா பல்மருத்துவக் கல்லூரி (Goa Dental College) என்பது, இந்தியாவின் கோவாவில் உள்ள பன்ஜிம் அருகே பாம்போலிமில் கோவா மருத்துவக் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள பல்மருத்துவம் பயிற்றுவிக்கும் கல்லூரியாகும். இது மருத்துவமனை வசதியையும் கொண்டுள்ளது. கோவா பல்மருத்துவக் கல்லூரி கோவா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
கற்பிக்கப்படும் படிப்புகள்[தொகு]
- இளநிலை பல் மருத்துவம்
- முதுநிலை பல் மருத்துவம்
இடங்கள்: வருடத்திற்கு 50 (இளநிலை)
துறைகள்[தொகு]
கோவா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 9 துறைகள் உள்ளன:
- வாய்வழி மருத்துவம் மற்றும் கதிரியக்கவியல் துறை
- சிறார்ப் பல்லியல் மற்றும் தடுப்பு பல் மருத்துவத் துறை
- பற்கள் சீரமைப்பு இயல் மற்றும் பல் முக எலும்பியல் துறை
- பல்சூழ்திசுவியல் துறை
- வாய்வழி மற்றும் முகம் சார்ந்த அறுவை சிகிச்சை துறை
- பல் பாதுகாப்பு மருத்துவம் மற்றும் பல்நோய் சிகிச்சை துறை
- செயற்கைப்பல் துறை
- பொதுச் சுகாதார பல் மருத்துவத் துறை
- வாய்வழி மற்றும் மேல்தாடை நோயியல் துறை